ஆந்திர மாநில AICC பொதுச் செயலராகிறார் உமன் சாண்டி!

இந்திய தேசிய காங்கிரஸ் ஆனது இன்று மேற்கு வங்கம், அந்தமான் நிக்கோபார் மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கான மாநில பொதுச்செயலர்களை மாற்றி அறிவித்துள்ளது!

Last Updated : May 27, 2018, 02:21 PM IST
ஆந்திர மாநில AICC பொதுச் செயலராகிறார் உமன் சாண்டி! title=

இந்திய தேசிய காங்கிரஸ் ஆனது இன்று மேற்கு வங்கம், அந்தமான் நிக்கோபார் மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கான மாநில பொதுச்செயலர்களை மாற்றி அறிவித்துள்ளது!

இதன்படி ஆந்திராவின் மாநில காங்கிரஸ் பொதுச்செயலராக கேரளாவின் முன்னாள் முதல்வர் உமன் சாண்டி இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு ஆந்திராவில் பொதுத்தேர்தல் வருவதையொட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதற்கு முன்னதாக ஆந்திர காங்கிரஸ் பொதுச்செயலராக இருந்த மூத்த தலைவர் திக்விஜய சிங்-கிற்கு பதிலாக இவர் மாற்றப்பட்டுள்ளார். திக் விஜய சிங் மத்திய பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதே வேலையில் மேற்கு வங்கத்திலும், அந்தமான் நிக்கோபார் மாநிலத்திற்கு கௌரவ் கோகாய் பொருப்பேற்கின்றார். இவருக்கு முன்னதாக இம்மாநில பொருப்பில் Dr CP ஜோஷி பொருப்பில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஆந்திர மாநிலத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேச கட்சியின் ஆட்சி நடைப்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்த்து வேண்டி தெலுங்கு தேச கட்சி, பாஜக-வின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

வரும் 2019-ஆம் ஆண்டு பொது தேர்தலில் ஆந்திர மாநிலம் 25 MP-களை லோக் சபாவிற்கு அனுப்பவுள்ளது. அதேப்போல் மேற்கு வங்க மாநிலத்தில் வரும் 2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைப்பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending News