Viral Video : கணவர் முன் நடிகைக்கு நிகழ்ந்த சம்பவம்... சேலையால் தர்மசங்கடம்!

ஒரு பொது நிகழ்ச்சி ஒன்றில், நடிகை வித்யா பாலனுக்கு தர்ம சங்கடம் அளிக்கும் வகையில் ஏற்பட்ட நிகழ்வின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

Written by - Sudharsan G | Last Updated : Dec 12, 2022, 05:01 PM IST
  • பாலிவுட் தயாரிப்பாளர் குனீத் மோங்கா, சன்னி கபூரை இன்று திருமணம் செய்தனர்.
  • திருமணத்திற்கு முந்தைய விருந்து நேற்றிரவு நடைபெற்றது.
Viral Video : கணவர் முன் நடிகைக்கு நிகழ்ந்த சம்பவம்... சேலையால் தர்மசங்கடம்! title=

மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் பாலிவுட் தயாரிப்பாளர் குனீத் மோங்கா திருமணம் இன்று நடைபெற்றது. அதற்கு முன்னதாக, குனீத் மோங்கா - சன்னி மோங்கா ஜோடி இணைந்து நேற்றிரவு நடத்திய திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சியில் பல்வேறு திரை நட்சத்திரங்கள், பிரபலங்கள் கலந்து கொண்டனர். 

இந்த நிகழ்ச்சியில், பாலிவுட் நடிகை வித்யா பாலன், தனது கணவரும், பிரபல தயாரிப்பாளருமான சித்தார்த் ராய் கபூர் உடன் கலந்துகொண்டார். அப்போது, நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வெளியே புகைப்படம் எடுக்க வரும்போது, நடிகை வித்யா பாலின் சேலை முந்தானை ஒரு பொருளில் சிக்கியது. இதனால், முந்தானை அவிழ்ந்த நிலையில், அவர் உடனடியாக செயல்பட்டு முந்தானையை சரி செய்துகொண்டார்.

மேலும் படிக்க | படத்துக்காக இவ்வளவு நெருக்கமா? கணவரையே கடுப்பேற்றும் தீபிகா படுகோன்

சிவப்பு கம்பள வரவேற்பில் நடந்த இந்த சம்பவத்தை பலரும் வீடியோ எடுத்தனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. முந்தானை சிக்கியதை உடனடியாக உணர்ந்து, அதில் இருந்து விடுவித்து, உடையை சீர்செய்து கொண்டு மீண்டும் ஊடகங்களுக்கு அவர் போஸ் கொடுத்தார்.

 

கரண் ஜோஹர், விஷால் பரத்வாஜ், ஏக்தா கபூர், சோனாலி பிந்த்ரே மற்றும் கோல்டி பெஹ்ல், நேஹா தூபியா, மௌனி ராய், ரியா சக்ரவர்த்தி, சங்கி பாண்டே மற்றும் பாவ்னா பாண்டே, சஞ்சய் கபூர், ரிதி டோக்ரா, தாஹிரா காஷ்யப், யுவிகா சவுத்ரி உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் அந்த திருமண விருந்தில் கலந்துகொண்டனர். தொடர்ந்து, குனீத் மோங்கா - சன்னி மோங்கா தம்பதியருக்கு இன்று திருமணம் நடந்தது. அதன் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி உள்ளன. 

வித்யா பாலன் நடிப்பில், இந்தியில் ஜல்சா என்ற படமும், தமிழில் வலிமை படமும் வெளிவந்திருந்தது. தற்போது, பெயரிடப்படாத ஒரு படத்திலும், நியாத் என்ற படத்திலும் நடித்து வருகிறார். 

மேலும் படிக்க | நடிகர் ராம் சரணின் மனைவி கர்ப்பம், சிரஞ்சீவி வீட்டில் கொண்டாட்டம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News