புதிய கெட்டப்பில் மக்கள் செல்வம்!!- Photo உள்ளே

Last Updated : Oct 20, 2017, 02:12 PM IST
புதிய கெட்டப்பில் மக்கள் செல்வம்!!- Photo உள்ளே title=

விஜய் சேதுபதி மற்றும் கோகுல் 2வது முறையாக இணைந்திருக்கும் ஜூங்கா படத்தின் படப்பிடிப்பு பாரீஸில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இப்படத்தின் விஜய் சேதுபதியின் புதிய கெட்டப் புகைப்படங்கள் வெளிவந்துக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில், பெண் வேடமிட்ட புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலானது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 

இதில் விஜய் சேதுபதி கையில் ஒரு துப்பாக்கியுடன் கோட்சூட் அணிந்து வித்தியாசமான ஹேர்ஸ்டைலில் தோற்றமளிக்கிறார்.

யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைக்கிறார். ராஜூ சுந்தரம் நடன இயக்குநராக பணியாற்றுகிறார். இந்த படத்தின் கதை பிடித்து போனதால் தனது சொந்த தயாரிப்பிலே 20 கோடி பட்ஜெட்டில், இதுவரை விஜய்சேதுபதி நடித்த படங்களிலேயே அதிக பொருட் செலவில் உருவாகும் படமாக ஜங்கா தயாராகி வருகிறது. இப்படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு பாரீஸில் நடைபெறவுள்ளது. 

Trending News