சிவகார்த்திகேயன் 'வேலைக்காரன்' 2வது லுக் போஸ்டர்..!

Last Updated : Aug 8, 2017, 09:24 AM IST
சிவகார்த்திகேயன் 'வேலைக்காரன்' 2வது லுக் போஸ்டர்..! title=

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பஹத் பாசில், பிரகாஷ்ராஜ், சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கும் படம், 'வேலைக்காரன்'. 

ரெமோ படத்தைத் தயாரித்த '24 AM STUDIOS' இந்த படத்தையும் தயாரிக்கிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்நிலையில், படத்தின் 2வது லுக் போஸ்டரை இன்று நள்ளிரவு 12 மணி அளவில் வெளியிட்டுள்ளனர். 

 

 

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் சிவா மட்டும் சோலோ பெர்ஃபார்மன்ஸ் கொடுத்திருந்தார். ஆனால், இந்த போஸ்டரில் பகத் பாசிலும் தலையைக் காட்டியுள்ளார். 

இந்த படம் செப்டம்பர் 29-ம் தேதி வெளியாகவுள்ளது. விரைவில் படத்தின் டீசர், டிரெய்லரும் ரிலீஸ் ஆகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Trending News