உதயநிதி பாராட்டால் நெகிழ்ந்த இயக்குநர்

இடிமுழக்கம் படம் பார்த்துவிட்டு பாராட்டிய உதயநிதி ஸ்டாலினுக்கு நெகிழ்ச்சியுடன் இயக்குநர் சீனுராமசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Apr 27, 2022, 06:37 PM IST
  • சீனுராமசாமியை பாராட்டிய உதயநிதி
  • இடிமுழக்கம் படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த உதயநிதி ஸ்டாலின்
  • உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து இடிமுழக்கம் படக்குழு
உதயநிதி பாராட்டால் நெகிழ்ந்த இயக்குநர் title=

இயக்குநர் சீனுராமசாமி இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷை வைத்து இடிமுழக்கம் என்ற படத்தை இயக்கியுள்ளார்.  ஜிவிக்கு ஜோடியாக காயத்ரி நடித்திருக்கிறார். கலைமான் முபாரக் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு என்.ஆர். ரகுநந்தன் இசையமைத்துள்ளார்.

சீனுராமசாமியின் கதைக்களம் வித்தியாசமாகவும், யதார்த்தமாகவும் இருக்குமென்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது. இப்படமானது விரைவில் வெளியாக இருக்கிறது.

Gv Prakash, Seenu Ramasamy

இந்நிலையில் இடிமுழக்கம் படத்தை பார்த்துவிட்டு உதயநிதி ஸ்டாலின் படக்குழுவினரை தொலைபேசியில் அழைத்து பாராட்டினார். இதனையடுத்து படத்தின் தயாரிப்பாளர் கலைமான் தனது ட்விட்டர் பக்கத்தில், “ இடிமுழக்கம் சிறப்புக்காட்சி பார்த்த உதயநிதி ஸ்டாலின் படம் மிக நன்றாக வந்திருப்பதாக பாராட்டி ஊக்குவித்தது மகிழ்ச்சியளிக்கிறது.

 

வேலை பழு இடையிலும் நேரம் ஒதுக்கி பார்த்தமைக்கு படக்குழு சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க | குழந்தை நட்சத்திரமாக தளபதி விஜய் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இயக்குநர் சீனு ராமசாமி வெளியிட்டுள்ள ட்வீட்டில், “திரைப்படம் வெளியாகி  சினிமா நண்பர்கள் யாரும் இயக்குநரை அழைக்கவில்லையெனில் அப்படம் வெற்றி என்பது நானறிந்த சூத்திரம். 

 

ஆனால் இடிமுழக்கம் சிறப்பு காட்சி பார்த்ததும் என்னை மட்டுமல்ல ஜி.வி. பிரகாஷ், சரண்யா பொன்வண்ணன் ஆகியோரை அலைபேசியில் பாராட்டிய பரந்தமனம் கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க | விஜய் கொடுத்த சர்பிரைஸால் குக்வித் கோமாளி சிவாங்கி ஹேப்பி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News