Tippu Movie Controversy: 'தி கேரளா ஸ்டோரி' படத்தை தொடர்ந்து 'திப்பு' என்ற படமும் சர்ச்சையில் சிக்கி உள்ளது. இந்த படத்திற்கான அறிவிப்பு மட்டுமே வெளியாக இருக்கும் நிலையில் அதுவே நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அப்படி அதில் என்னதான் உள்ளது என்பது குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
40 லட்சம் இந்துக்கள் மதமாற்றம்
18ஆம் நூற்றாண்டில் 8000 கோவில்கள் 27 தேவாலயங்கள் இடிக்கப்பட்டன 40 லட்சம் இந்துக்கள் இஸ்லாமியர்களாக மாற்றப்பட்டனர். இந்துக்கள் மாட்டு இறைச்சி உண்ணும் படி கட்டாயப்படுத்தப்பட்டனர் போன்ற பல்வேறு சர்ச்சைகளை சுமந்து கொண்டு ஒரு படம் உருவாகிக் கொண்டிருக்கிறது. திப்பு என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் குறித்த ஒரு முன்னோட்டக் காட்சிகளில் தான் இந்த தகவல்கள் இடம்பெற்று இருக்கிறது.
இந்தப் படத்தை சந்தீப் ஷர்மா என்பவர் இயக்குகிறார். இந்தப் படத்தின் இயக்குனர் பேசுகையில் திப்பு சுல்தான் பற்றி பள்ளியில் கற்பிக்கப்பட்டது தவறான தகவல் என்றும் உண்மையான திப்பு சுல்தான் வரலாறு பற்றி தான் தெரிந்து கொண்ட பின்பு அதிர்ச்சி அடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார் . மேலும் திப்பு சுல்தானை அந்த காலத்து ஹிட்லர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கேரளா ஸ்டோரிக்கு பின்
ஏற்கனவே கடந்த வாரம் வெளியான தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படம் சர்ச்சையாக இருந்தது. இந்தப் படத்தில் 32,000 பெண்கள் இஸ்லாமியராக கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு தீவிரவாத செயல்களில் ஈடுபடுத்தப்பட்டதாக காட்சிப்படுத்தியது ஏற்கனவே சர்ச்சையை கிளப்பியது. இந்த படத்துக்கு காங்கிரஸ் இடதுசாரி அமைப்புகள் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து இந்த படம் தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்டது.
மேலும் படிக்க | தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவித்த போண்டா மணி... ஏன் தெரியுமா?
தி கேரளா ஸ்டோரி படத்திற்கு ஒரு புறம் எதிர்ப்பு கிளம்பினாலும் மறுபுறம் பிரதமர் மோடி இந்த படத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். இந்த படத்தை எதிர்ப்பவர்கள் குறிப்பாக காங்கிரஸ் உள்ளிட்டோர் மறைமுகமாக பயங்கரவாதத்திற்கு ஆதரவு தெரிவிக்க முயற்சிக்கிறார்கள் என்று வெளிப்படையாகவே கூறியிருந்தார். மேலும் ஷாருக்கான் நடிப்பில் வெளியான பத்தான் படத்தில் காவி சர்ச்சை எழுந்த போது கூட பிரதமர் மோடி படத்தை படமாக பார்க்க வேண்டும் என்று பாஜக தொண்டர்களுக்கு அறிவுரை கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எது உண்மை?
இந்த நிலையில் கர்நாடக மாநிலம் மைசூருவை மையமாக வைத்து ஆண்ட திப்பு சுல்தான் எப்போதும் சர்ச்சைக்குரியவராக இருந்து வருகிறார். கர்நாடகா, கேரளாவில் ஆயிரக்கணக்கான இந்து கோவில்களை இடித்தவர், பல லட்சம் ஹிந்துக்களை கட்டாயப்படுத்தி இஸ்லாம் மதத்திற்கு மாற்றியவர் என்று இந்து அமைப்புளும் வலதுசாரிகளும் கூறி வருகின்றனர்.
ஆனால் திப்பு சுல்தான் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடிய சுதந்திர போராட்ட வீரர் என இடதுசாரி அமைப்பினர் பலரும் திப்பு சுல்தானை கொண்டாடி வருகின்றனர். இப்படியாக பல வருடங்களாக திப்பு சுல்தானை முன்வைத்து அரசியல் நடந்து வருகிறது.
தொடரும் சர்ச்சைகள்
இந்நிலையில் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாத வகையில் அடுத்தடுத்து சர்ச்சை படங்கள் பற்றிய அறிவிப்புகள் வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் தி கேரளா ஸ்டோரி படத்திற்கு பிறகு சந்தீப் ஷர்மா இயக்கம் திப்பு படம் அந்த பரபரப்பு லிஸ்டில் இணைந்துள்ளது. இவை தவிர ஏற்கனவே சந்தீப் அடல் பிகாரி வாஜ்பாய் பற்றிய வாழ்க்கை வரலாற்று படமான அட்டல் என்ற படத்தை இயக்கியிருந்தார். தொடர்ந்து இவர் இயக்கத்தில் சுதந்திர வீரர் சாவர்க்கர் என்ற படமும் தயாராகி வருகிறது.
இது தொடர்பாக பாஜகவினர் கூறுகையில் சினிமா துறையை வைத்து பாஜகவுக்கு எதிரான கருத்துகளை காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கூறி வந்ததாகவும், ஆனால் தற்போது அதே சினிமாவை வைத்து வரலாற்று உண்மைகளை வெளிப்படுத்தும் போது அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றும் கூறுகின்றனர்.
மேலும் படிக்க | 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மாதவனுடன் நடிக்கும் மீரா ஜாஸ்மின்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ