பிக்பாஸ் வீட்டில் செம ரொமான்ஸ்! போர்வைக்குள் காதல் லீலைகள்-வைரலாகும் வீடியோ!

பிக்பாஸ் வீட்டில் இரண்டு போட்டியாளர்கள் போர்வையை போர்த்திக்கொண்டு ரொமான்ஸ் செய்யும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.   

Written by - Yuvashree | Last Updated : Nov 26, 2023, 05:49 PM IST
  • இந்திய ரியாலிட்டி ஷோக்களுள் ஹிட் அடித்த நிகழ்ச்சி, பிக்பாஸ்.
  • இந்த நிகழ்ச்சியில் அவ்வப்போது ரொமான்ஸ் நடப்பது சகஜம்.
  • இந்த முறை அது கொஞ்சம் ஓவராக சென்றுள்ளது.
பிக்பாஸ் வீட்டில் செம ரொமான்ஸ்! போர்வைக்குள் காதல் லீலைகள்-வைரலாகும் வீடியோ! title=

சர்ச்சைக்கும், சங்கடங்களுக்கும் பெயர் போன ஒரு நிகழ்ச்சி, பிக்பாஸ். என்னதான் இந்த நிகழ்ச்சியில் இடம் பெரும் சில விஷங்கள் பலரை முகம் சுளிக்க வைத்தாலும், யாரும் இந்நிகழ்ச்சியை பார்ப்பதை நிறுத்திய பாடில்லை. அப்படி ஒரு விஷயம்தான் தற்போதும் நடந்துள்ளது. 

பிக்பாஸ் நிகழ்ச்சி..

வெளிநாடுகளில் எடுக்கப்படும் படங்கள், ரியாலிட்டி நிகழ்ச்சிகளை இந்தியாவில் அவ்வப்போது நாம் ரீ-கிரியேட் செய்வதுண்டு. அப்படி, ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்ட டெலிவிஷன் நிகழ்ச்சிதான் ‘பிக் பிரதர்’. இந்த நிகழ்ச்சியில் திரை துறையை சார்ந்த பல்வேறு நபர்கள் ஒரே வீட்டில் வசிப்பர். இதனால் அவர்களுக்குள் பல சண்டைகளும் சர்ச்சைகளும் ஏற்படும். இந்த நிகழ்ச்சியை 2007ஆம் ஆண்டு இந்தியில் பிக்பாஸ் என்ற பெயரில் ஆரம்பித்தனர். இதனை தற்போது சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார். தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. அனைத்து மொழிகளிலும் இந்நிகழ்ச்சி ஹிட்தான்.

பிக்பாஸ் கிளை நிகழ்ச்சிகள்..

பிக்பாஸ் நிகழ்ச்சி மட்டுமன்றி, அதை சுற்றி அதைப்போலவே சில கிளை நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாகி வருகின்றன. உதாரணத்திற்கு தமிழில், பிபி ஜோடிகள், பிக்பாஸ் அல்டிமேட் போன்ற நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின. இதே போல இந்தியிலும் சில நிகழ்ச்சிகள் இருக்கின்றன. அப்படிப்பட்ட நிகழ்ச்சிகளுள் ஒன்றுதான், “டெம்டேஷன் ஐலாண்ட்”. இந்த நிகழ்ச்சி, ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில், காதல் ஜோடிகள் பங்குபெற வேண்டும். இவர்கள் இருவரும் பிரிக்கப்பட்டு, வேறு ஒருவருடன் தங்க வைக்கப்படுவர். அவர்கள், அந்த இன்னொரு நபரால் ஈர்க்கப்படுகிறார்களா இல்லையா என்பதை இந்த நிகழ்ச்சியில் காண்பிப்பர். இவர்களின் காதல் எந்த அளவிற்கு வலுவாக உள்ளது என்பதை சோதிக்க இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. 

மேலும் படிக்க | பிக்பாஸில் இந்த வாரம் டபுள் எவிக்ஷன்! வெளியேறும் ‘அந்த’ 2 போட்டியாளர்கள் யார்?

ரொமான்ஸ் செய்த ஜோடி..

இந்த நிகழ்ச்சியும், பிக்பாஸ் வீடு போன்ற ஒரு இடத்திலேயே நடத்தப்படுகிறது. இதனால் சமயங்களில் ரசிகர்கள் இது பிக்பாஸ் நிகழ்ச்சியா அல்லது வேறு ஏதாவது நிகழ்ச்சியா என குழம்பி வருகின்றனர். தற்போது வைரலாகி வரும் இந்த வீடியோவில், ஒருவர் அவருக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் போட்டியாளருடன் காதல் லீலைகளில் ஈடுபடுகிறார். ஒரு கட்டத்தில் அவர் மீது போர்வையை போர்த்திக்கொண்டு சில்மிஷம் செய்கிறார். 

இந்தி மொழியில் நடந்து வரும் இந்த நிகழ்ச்சியை மெளனி ராய் மற்றும் ராஜ் குந்தரா ஆகியோர் தொகுத்து வழங்கி வருகின்றனர். இதற்கு பெரிய ரசிகர்கள் பட்டாளமும் இருக்கிறது. 

மேலும் படிக்க | வறுமையில் வாடும் பிரபல நடிகர்..வீடு கூட இல்லாமல் பிளாட்பார்மில் வாழும் அவலம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News