வாலி படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி குஷி, நியூ என ஹிட் படங்களை கொடுத்தவர் எஸ்.ஜே. சூர்யா. இவரது இயக்கத்திற்கென்று இன்றுவரை பலர் ரசிகர்களாக இருக்கின்றனர். சில காலம் இயக்கத்திலிருந்து ஒதுங்கியிருந்த சூர்யா இசை படத்தின் மூலம் இயக்குநராக ரீ எண்ட்ரி கொடுத்தார். அதுமட்டுமின்றி அந்தப் படத்தில் இசையமைப்பாளராகவும் அறிமுகமானார். அந்தப் படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. அதன் பிறகு படங்களில் நடிப்பதில் மட்டுமே தீவிர கவனம் செலுத்திவருகிறார்.
மான்ஸ்டர்,நெஞ்சம் மறப்பதில்லை உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்த எஸ்.ஜே.சூர்யா வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு ஹீரோவாக நடித்த மாநாடு படத்தில் வில்லனாக நடித்தார். அதில் அவரது நடிப்பு பலரது பாராட்டையும் பெற்றது.மேலும், “வந்தான் சுட்டான் ரிப்பீட்டு முடியல தலைவரே” என அவர் பேசிய வசனமும், தொனியும் இன்றுவரை அனைவரது ஃபேவரைட்.
மேலும் படிக்க | இந்த காரணங்களுக்காக தான் புஷ்பா, பேமிலி மேனில் நடித்தேன் - சமந்தா விளக்கம்!
மாநாடு படத்துக்கு பிறகு எஸ்.ஜே. சூர்யாவுக்கு நடிப்பதற்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் கிடைத்துவருகின்றன. அந்தவகையில் வெங்கட் ராகவன் என்பவர் சூர்யாவை வைத்து கடமையை செய் என்ற படத்தை இயக்கியுள்ளார்.
Gd news The most awaited @iam_SJSuryah 's #KadamaiyaiSei releasing worldwide on August 12th ..Get ready fr a grt entertainment
@iamyashikaanand@arunrajmusic @srikanth_nb @vinothrsamy @Arunbharathioff @iamSandy_Off @vasymusicoffl@ProBhuvan @CtcMediaboy pic.twitter.com/C4JxZ2h3oV
— Venkatt Ragavan (@Venkatt_Ragavan) July 22, 2022
டி.ஆர் ரமேஷ், ஜாகீர் உசேன் ஆகியோர்இணைந்து தயாரித்துள்ள இப்படம் ஜூன் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சில காரணங்களால் வெளியாகவில்லை.
மேலும் படிக்க | காதல் தோல்வியால் தற்கொலைக்கு முயன்ற பிரபல சீரியல் பிரபலம்?
இந்நிலையில் படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, கடமையை செய் படம் ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ