விவேக் மரணத்திற்கு இதுவே காரணம்! மனித உரிமை ஆணையம் விசாரணை

கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 25, 2021, 01:01 PM IST
விவேக் மரணத்திற்கு இதுவே காரணம்! மனித உரிமை ஆணையம் விசாரணை title=

நடிகர் விவேக் கடந்த 15 ஆம் தேதி கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். அப்போது கொரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்ள மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வரவேண்டும் என பேட்டியளித்து இருந்தார். 

இதற்கிடையில் சின்ன கலைவாணர் என்று அழைக்கப்படும் தமிழ் திரை உலகில் முன்னணி நகைச்சுவை நடிகர் விவேக் (Vivekh) சென்னை சாலிகிராமம் பத்மாவதி நகரில் தனது வீட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 16ஆம் திகதி பேசி கொண்டிருந்த போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயக்கம் அடைந்தார். உடனடியாக அவரை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு எக்மோ கருவி பொருத்தி தீவிர சிகிச்சை கொடுக்கபட்டது. ஆனால் அவர் மறுநாள் சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 17 ஆம் தேதி திடீரென மரணமடைந்தார்.

ALSO READ | Watch: Vivek த்ரோபேக் வீடியோ, முன்பு சிரிக்கமட்டும் வைத்தவர் இப்போது அழவும் வைக்கிறார்

நடிகர் விவேக்வின் மரணம் திரையுலகினர் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையில் விவேக் இறப்பதற்கு முந்தைய நாள் தான் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டார். இதையடுத்து நடிகர் விவேக்கின் (Vivekh) மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி (Corona Vaccine) தான் காரணமாக இருக்குமோ என பலரும் கேள்வியெழுப்ப தொடங்கினர். இந்த சந்தேகம் சமூக வலைதளங்களில் இது பெரிய விவாதமாக மாறியது. குறிப்பாக மன்சூரலிகான் (Mansoor Ali Khan) எழுப்பிய கேள்விகள் சமூக வலைதளத்தில் விவாதமானது. 

இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் நடிகர் விவேக் மரணமடைந்ததாக கூறி விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன் என்பவர் தற்போது தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். இதன் பேரில் தற்போது நடிகர் விவேக் மரணம் தொடர்பான புகாரை தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு ஏற்றுள்ளது. 

ALSO READ | அரசு மரியாதையுடன் நடிகர் விவேக் உடல் தகனம்: தமிழக அரசு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News