சைஃப் அலிகான் கத்திக்குத்து விவகாரம்; மனைவி கரீனா கபூர் வாக்குமூலம்?

Saif ali khan: நடிகர் சைஃப் அலி கான் கத்திக்குத்தி விவகாரம் தொடர்பாக அவரது மனைவி கரீனா கபூர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். 

Written by - R Balaji | Last Updated : Jan 18, 2025, 03:22 PM IST
  • சைஃப் அலி கான் கத்திக்குத்து விவகாரம்
  • மனைவி கரீனா கபூர் வாக்குமூலம்?
சைஃப் அலிகான் கத்திக்குத்து விவகாரம்; மனைவி கரீனா கபூர் வாக்குமூலம்?  title=

பாலிவுட் நடிகரான சைஃப் அலி கானின் மும்பை பாந்த்ரா வீட்டில் புகுந்து திருட முயன்ற நபரை தடுத்த நடிகர் சைஃப் அலி கானை அந்த நபர் கத்தியால் 6 முறை குத்தியது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

நேற்று முன்தினம்(ஜன.16) சைஃப் அலி கான் தங்கியிருந்த 12 மாடி குடியிருப்புக்குள் அந்த நபர் அதிகாலை 2.30 மணி அளவிற்கு வந்துள்ளான். இதனை அவரது வீட்டில் வேலை பார்ப்பவர் பார்த்து சத்தம் போடவே சைஃப் அலி கான் சத்தம் கேட்டு வந்து அந்த நபரை தடுக்க முயன்றபோது சைஃப் அலி கானையும் பணியாளரையும் கத்தியால் குத்திவிட்டுத் தப்பிச் சென்றார். 

இதனால் காயமடைந்த சைஃப் அலி கானை அவரது மகன் இப்ராஹிம் ஆட்டோவில் லீலாவதி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அறுவை சிகிச்சைக்கு பின்னர் தற்போது நலமாக உள்ளார் என தகவல் வருகின்றன. இந்நிலையில், அந்த மர்ம நபரை  போலீசார் தனிப்படை வைத்து தீவிரமாக தேடி வந்த நிலையில், நேற்று(ஜன.17)  போலீசார் கைது செய்தனர். மேலும், தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

மேலும் படிங்க: பிசிசிஐயின் புதிய கட்டுப்பாடுகள்.. ஹர்பஜன் சிங் கடும் விமர்சனம்!

கரீனா கபூரின் வாக்குமூலம் 

இந்த நிலையில், சைஃப் அலி கானின் மனைவியும் நடிகையுமான கரீனா கபூர், அந்த நபர் மிகவும் ஆக்ரோஷமாக இருந்தார் எனவும் திறந்த வெளியிலிருந்த நகைகளை அந்த நபர் எடுக்க வில்லை என்றும் தெரிவித்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

ஆட்டோ ஓட்டுநரின் வாக்குமூலம்

ஆட்டோ ஓட்டுநர் கூறியதாவது, நான் அவரது வீட்டு வழியாக சென்றுக்கொண்டிருந்தேன். அப்போது பெண் ஒருவர் ஆட்டோவை நிறுத்தும் படி கூறினார். அப்போது சைஃப் அலி கானை ரத்த காயங்களுடன் அழைத்து வந்தனர். அவருடன் ஒரு குழந்தையும் இருந்தது. அந்த குழந்தைக்கு எழிலிருந்து எட்டு வயது இருக்கும். சைஃப் அலி கான் ஆட்டோவில் ஏறிய பிறகு மருத்துவமனைக்கு செல்ல எவ்வளவு நேரம் ஆகும் எனக் கேட்டார். நான் 10 நிமிடங்களில் சென்று விடலாம் என கூறினேன். பின்னர் மருத்துவமனைக்கு சென்ற பிறகு அங்கிருந்த மருத்துவமனை காவலரை அழைத்து ஸ்ட்ரெச்சர் கொண்டு வாங்க. நான் சைஃப் அலி கான் எனத் தெரிவித்தார். 

மருத்துவர் கூறியது

அறுவை சிகிச்சையின் போது, சைஃப் அலி கானின் முதுகுத்தண்டில் இருந்து 2.5 இன்ச் கத்தி துண்டை அகற்றினோம். 2 மிமீ வரை சென்றிருந்ததால் அறுவை சிகிச்சை செய்தோம். தற்போது அவர் நலமாக உள்ளார். காயங்கள் குணமடைந்து வருகின்றன என மருத்துவர் நிதின் டாங்கே தெரிவித்தார்.  

முன்னதாக கரீனா கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியதாவது, எங்கள் குடும்பத்திற்கு இது ஒரு கடினமான நாளாக உள்ளது. போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். எனவே ஊடகங்களும் ரசிகர்களும் பொறுமையாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்திருந்தார். 

மேலும் படிங்க: சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி அறிவிப்பு! சுப்மான் கில் துணை கேப்டன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News