எந்த ஒரு செயலும் கடவுளின் அருளால் மட்டுமே சாத்தியமாகாது கூடுதலாக மனிதருடைய முயற்சியும் இருந்தால் மட்டுமே அந்த செயல் சாத்தியமாகும். இந்தநிலையில் ஜோதிடத்தில் கற்றல் திறனில் அதிகம் சக்தி கொண்ட ராசிக்காரர்கள் யார் யார் என்று சொல்லப்பட்டுள்ளது. இதில் உங்கள் ராசியும் இடம் பெற்றுள்ளதா.
ஜோதிடத்தில் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு கற்றல் சக்தி அதிகம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. எல்லா ராசிகளுக்கும் ஒரு தனித்துவமான சக்தி இருக்கிறது. புதுமைப் படைத்த ஆற்றல், தந்திரம் எல்லா ராசிகளுக்கும் உண்டு. அதில் குறிப்பிட்ட இந்த ராசிகளுக்கு மட்டும் கூடுதலாக இருப்பதாக ஜோதிடத்தில் கூறப்படுகிறது.
தனுசு ராசிக்காரர்கள் தங்களின் ஆய்வு, சாகசம் போன்ற அனைத்திலும் பல மடங்கு திறமையைப் பெற்றிருப்பார்கள். உலகத்தைப் பற்றி அறிய அதிகம் ஆர்வம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
இந்த ராசிக்காரர்கள் வெளிநாட்டில் படித்தாலும் சரி அல்லது உள்நாட்டில் படித்தாலும் சரி நீங்கள் ஏதேனும் தோல்வியோ வெற்றியோ அடைந்தால் அதில் கற்க முயல வேண்டும் என்று சொல்லப்படுகிறது.
கன்னி ராசிக்காரர்கள் ஒவ்வொரு வார்த்தையிலும் கூர்மையான பார்வையைக் கொண்டு இருப்பார்கள் அல்லது அதற்குத் தெளிவான விவரத்தை அறிய முயல்வார்கள்.
கன்னி ராசிக்காரர்கள் கணிதம், அறிவியல், பகுப்பாய்வு, கற்றல் உள்ளிட்ட அனைத்திலும் உள்ளார்ந்த ஆராய்ச்சியை மேற்கொள்வார்கள்.
கும்பம் ராசிக்காரர்கள் தங்களின் சிந்தனைத் திறன் மற்றும் உளவியல் சிந்தனை அனைத்திலும் ஆர்வம் காட்டுவார்கள். கற்றல் திறனில் இவர்கள் அதிகம் ஈர்க்கப்படுவார்கள்.
கும்பம் ராசிக்காரர்களுக்கு சமூக விதிமுறைகளில் புரிந்துகொள்ளச் சிரமம் ஏற்படும். ஏனென்றால் அதற்கான உரிய விடையைக் கண்டுபிடிப்பதில் அவர்கள் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள்.
மிதுன ராசிக்காரர்கள் புதனால் ஆளப்படும் ராசிக்காரர்கள். இந்த ராசியில் புதன் இருப்பதால் கற்றலில் அதிகமான ஈடுபாடு இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
மிதுன ராசிக்காரர்கள் அதிகமான கற்றலை விரும்புவார்கள். ஒரு விஷயங்களில் உள்ளார்ந்த அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில் முழு முயற்சியும் கொடுக்கும் ராசிக்காரர்கள்.
மகர ராசிக்காரர்கள் இலக்கை நோக்கிச் செயல்படுபவர்கள், பொறுமையானவர்கள் மற்றும் ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பவர்கள். தங்கள் இலக்கு மற்றும் கற்றலில் அதிக ஈடுபாடு காட்டுவார்கள்.
மகர ராசிக்காரர்கள் தங்களின் தெளிவான இலக்கு, கற்றல் அனுபவத்தை அறிய முயல்வார்கள். வாழ்க்கையில் பல கடினமான சூழ்நிலை வந்தாலும் அதனைத் தாங்கிக் கொண்டு தன்னுடைய ஆர்வத்தை விடா முயற்சியாக மாற்ற முயல்வார்கள்.
பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்கள் மற்றும் கணிப்புகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை.