Ration Card | கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தால் ரேஷன் கார்டுதாரர்களுக்கு புதிய சிக்கல் வரப்போகிறது.
கலைஞர் உரிமைத் தொகை (Kalaingar Magalir Urimai Thogai) திட்டத்துக்கு விண்ணப்பிப்பவர்களின் ஆவணங்கள் சரிபார்ப்பில் ரேஷன் கார்டு முகவரியில் வசிக்காதவர்களின் கார்டுகள் ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளது.
தமிழ்நாடு அரசு பெண்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் உரிமைத் தொகை (Kalaingar Magalir Urimai Thogai) திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் சுமார் 1 கோடியே 15 லட்சம் பெண்கள் பயனாளிகளாக இருக்கின்றனர். விரைவில் புதிய பயனாளிகள் தேர்வு செய்யப்பட இருகின்றனர். ஏற்கனவே இந்த திட்டத்தில் பயனாளிகளாக இருந்த சுமார் ஒரு லட்சம் பேர் நீக்கப்பட்டிருக்கின்றனர்.
விரைவில் இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஏனென்றால் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தில் தகுதியான பெண்கள் பலர் இன்னும் பயன் பெறவில்லை. அதேநேரத்தில் தகுதியில்லாதவர்கள் கலைஞர் உரிமைத் தொகை பெற்று வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு கலைஞர் உரிமைத் தொகை பயனாளிகளை ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளது. அதில் தகுதியான பயனாளிகளாக இல்லாதவர்களின் பெய்ர்கள் நீக்கப்பட உள்ளது. அதுசரி, ரேஷன் கார்டுதாரர்களுக்கு இந்த திட்டத்தால் என்ன பிரச்சனை? என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம்.
கலைஞர் உரிமைத் தொகை ரேஷன் கார்டு (Ration Card) அடிப்படையிலேயே பயனாளிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். அந்தவகையில் பலர் வசிக்கும் முகவரியில் இல்லாமலேயே ரேஷன் கார்டு பொருட்கள் வாங்கிக் கொண்டிருக்கின்றனர். அத்துடன் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனாளிகளாகவும் இருக்கின்றனர். அரசு விதிமுறைப்படி வசிக்கும் முகவரியில் இருப்பவர்களுக்கே ரேஷன் கார்டு வைத்திருக்க வேண்டும்.
சொந்த வீடு, வாடகை வீட்டில் வசிப்பவர்கள் யாராக இருந்தாலும் ரேஷன் கார்டு முகவரி சரியாக இருக்க வேண்டும். ஒருவேளை முகவரி மாறியிருந்தால் புதிய முகவரிப்படி ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து முகவரியை மாற்றிக் கொள்ள வேண்டும். இது செய்யவில்லை என்றால் ரேஷன் கார்டை ரத்து செய்யவும் அதிகாரிகளுக்கு அதிகாரம் இருக்கிறது.
அந்தவகையில், கலைஞர் உரிமைத் தொகை பெறும் பயனாளிகள் அனைவரும் ரேஷன் கார்டு முகவரியில் வசிப்பவர்களாகவும் இருக்க வேண்டும். இல்லையென்றால் கள ஆய்வில் அந்த முகவரியில் இல்லை என்றால் கலைஞர் உரிமைத்தொகையும் வழங்கப்படாது.
அண்டை மாநிலமான கர்நாடகாவில் இலவச அரசி மற்றும் மாதாந்திர உதவித் தொகை பெறும் உண்மையான பயனாளிகளை கண்டறிய குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு போலி ரேஷன் கார்டுகளையும், தகுதியில்லாத பயனாளிகளையும் கண்டறிந்து சமூக நலத்திட்டங்களில் இருந்து அவர்களின் பெயரை நீக்கி வருகிறது.
அதன்படி தமிழ்நாடு அரசு செய்ய அதிக வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் விரைவில் கலைஞர் உரிமைத் தொகை திட்டம் விரிவாக்கம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. அதற்குள் சரியான பயனாளிகளை கண்டறிய அரசு இத்தகைய நடவடிக்கையில் இறங்க வாய்ப்புள்ளது. ஒருவேளை அத்தகைய கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டால் சரியான முகவரியில் வசிக்காதவர்களின் கலைஞர் உரிமைத் தொகை மற்றும் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.
முகவரி மாற்றத்துக்கு விண்ணப்பித்திருந்தால் அவர்களுக்கு எந்த பிரச்சனையும் வர வாய்ப்பில்லை. முகவரி மாற்றாமலேயே இருப்பவர்களின் ரேஷன் கார்டுகள் தான் சிக்கலை சந்திக்கும். சொந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு பெரும்பாலும் எந்த பிரச்சனையும் இருக்காது.