இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தூணாக இருந்தவர் மிதாலி ராஜ். தற்போது அவர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றிருந்தாலும் அவரது விளையாட்டும், அவர் முன்னேறிய விதமும் அனைவரையும் ஈர்க்கக்கூடியது.
இந்தச் சூழலில் அவரது வாழ்க்கையை வைத்து திரைப்படம் உருவாகுமென்று அறிவிக்கப்பட்டது. அதன்படி சபாஷ் மிது என பெயரிடப்பட்டு மிதாலியாக டாப்ஸி நடிக்க கமிட்டானார். படத்தை ராகுல் தொலாகியா இயக்குவார் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் தனிப்பட்ட காரணங்களுக்காக படத்திலிருந்து விலகினார்.
இதனையடுத்து ஸ்ரீஜித் முகர்ஜி இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். வயாகாம் 18 ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இதன் படிப்பிடிப்பு கடந்த வருடம் ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டு கொரோனா அச்சுறுத்தலால் நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து, கொரோனா பரவல் ஓய்ந்ததை அடுத்து மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு ஒரேகட்டத்தில் முடிக்கப்பட்டது. இதற்கிடையே படமானது இந்த வருடம் பிப்ரவரி மாதம் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ஏதோ காரணங்களால் ரிலீஸ் தள்ளிப்போனது.
One game, One nation, One ambition… My Dream!
Grateful to the team & excited to share my story with you all!
Check out #ShabaashMithuTrailer#GirlWhoChangedTheGame@taapsee @srijitspeaketh @AndhareAjit @priyaaven @Viacom18Studios @TSeries #ColosceumMedia https://t.co/B6oUnFzoCV— Mithali Raj (@M_Raj03) June 20, 2022
இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. அடித்தட்டிலிருந்து ஒரு நாட்டின் அணியை மிதாலி எப்படி வழிநடத்தினார், விளையாடினார் என்ற காட்சிகள் ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ளன.
டாப்ஸியைப் பொறுத்தவரை மிதாலியாகவே மாறியிருக்கிறார். அதுமட்டுமின்றி இந்தப் படத்துக்காக பிரத்யேகமாக அவர் கிரிக்கெட் பயிற்சியும் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | DM முதல் DK வரை.. முதல் டி-20 டீமில் இருந்த வீரர்களின் தற்போதைய நிலை- ஒரு பார்வை!
இந்திய சினிமாவில் பயோ பிக் படங்கள் சமீபகாலமாக நல்ல வரவேற்பை பெற்றுவரும் சூழலில் சபாஷ் மிது படமும் அந்த வரிசையில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR