Watch: ஆர்.ஆர்.ஆர் படத்தின் மோஷன் போஸ்டர்

இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் ஆர்.ஆர்.ஆர் படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Last Updated : Mar 25, 2020, 01:18 PM IST
Watch: ஆர்.ஆர்.ஆர் படத்தின் மோஷன் போஸ்டர் title=

பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி தற்போது தெலுங்கில் ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் நடித்துள்ளனர். டிவிவி தானய்யா தயாரிக்கும் இந்த படம் சுமார் ரூ. 350 கோடியில் உருவாகி வருகிறது. மேலும் அஜய் தேவ்கன், சமுத்திரகனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

தற்போது ஆர்.ஆர்.ஆர் படத்தின் படப்பிடிப்பு மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் லோகோ உடன் கூடிய மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த மோஷன் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இப்படம் 2021-ம் ஆண்டு ஜனவரி 8-ஆம் தேதி ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News