“அதிக சம்பளம் கேட்கும் நடிகர்கள் வேண்டாம்” - ஆர்.கே. செல்வமணி

அதிக சம்பளம் கேட்கும் நடிகர்கள் தேவையில்லை என இயக்குநர் ஆர்.கே. செல்வமணி கூறியுள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Apr 20, 2022, 05:09 PM IST
  • இயக்குநர்களுக்கு பட வாய்ப்பு வழங்கும் விழா
  • அதிக சம்பளம் வாங்கும் ஹீரோக்கள்
  • ஹீரோக்கள் சம்பளத்தை குறைக்க வலியுறுத்தல்
“அதிக சம்பளம் கேட்கும் நடிகர்கள் வேண்டாம்” - ஆர்.கே. செல்வமணி title=

இயக்குநர் சங்கத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களில் 10 பேருக்கு திரைப்பட வாய்ப்பு வழங்கும் விழா சென்னையில் நடந்தது. இதில் பெப்சி அமைப்பில் அங்கம் வகிக்கும் 23 சங்கங்களின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 

அந்தச் சங்கங்களின் உறுப்பினர்களுக்கும் இந்த 10 படங்களிலும் வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. இந்நிகழ்ச்சியில் இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, உதயகுமார், பேரரசு மற்றும் தயாரிப்பாளர்கள் சரவண பிரசாத், தேனாண்டாள் முரளி, ஐசரி கணேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Selvamani

நிகழ்ச்சியில் இயக்குநர் ஆர்.கே. செல்வமணி பேசுகையில்,  “இயக்குனர் சங்க உறுப்பினர்கள் இயக்கவுள்ள இந்த 10 திரைப்படங்களுக்கு கதைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த படங்களை இயக்கும் அவர்களுக்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. 

மேலும் படிக்க | போராட்டக்காரர்களுக்கு சாலை ஓரத்தில் இடம் ஒதுக்கிய ஒரே முதல்வர் ஸ்டாலின்: அண்ணாமலை

குறிப்பாக படத்தின் பட்ஜெட்டில் 40 சதவீதத்தை மட்டுமே நடிகர்கள் மற்றும் கலைஞர்களுக்கு சம்பளமாக வழங்க வேண்டும் - மீதமுள்ள 60 சதவீதத் தொகையை படத்திற்காக செலவிட வேண்டும் என நிபந்தனை உள்ளது. அதேபோல் அதிக சம்பளம் கேட்கும் நடிகர்களும், கலைஞர்களும் எங்களுக்குத் தேவையில்லை.

Selvamani

அதேபோல் தமிழ் நடிகர்களை வெளிமாநிலங்களில் உள்ள 50 சதவீதம் பேருக்கு மட்டுமே தெரியும். அதுவே இந்தியாவிற்கு வெளியில் அவர்களை யாருக்கும் தெரியாது. வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு நடிகர் யார், இயக்குனர் யார் என்பது தேவையில்லை. அவர்களுக்குத் தேவை கதை! அதை சரியாக செய்ய வேண்டும். அதை நாம் செய்வோம்” என்றார்.

மேலும் படிக்க | பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்த சினிமாவின் முன்னோடி ராமராவ் காலமானார்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News