தெலுங்கு நடிகர் ராம்சரண், சமந்தா நடிப்பில் உருவாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் 'ரங்கஸ்தலம்'. 80-களில் நடைபெறும் கிராமத்து கதையாக படம் உருவாகியுள்ளது.
இயக்குனர் சுகுமார் இப்படத்தினை இயக்க, ரத்தினவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ளார். மித் மூவி மேக்கர்ஸ் தயாரித்ததுள்ள இப்படம் நாடுமுழுவதிலும் பெரும் வரவேற்பினை பெற்றது.
கடந்த மார்ச் 30-ஆம் நாள் அன்று தெலுங்கில் வெளியான இத்திரைப்படம் ரூ.150 கோடி வசூள் சாதனை படைத்தது. வசூல் வேட்டை நடத்திவரும் இப்படம் சென்னையில் மட்டும் இதுவரை ரூ.3 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தெரிகிறது.
இதனையடுத்து இப்படம் மலையாளம், தமிழ், போஜ்பூரி மற்றும் இந்தி மொழி என நான்கு மொழிகளில் டப்பிங் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகளும் நடைப்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்போது தமிழ் திரையுலகில் ஸ்ட்ரைக் நடைப்பெற்று வருவதால், ஸ்ட்ரைக் முடுவடைந்ததும் இப்படம் தமிழகத்தில் தமிழில் திரையிட வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது!