கன்னட திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார். இவரது படங்களுக்கு எப்போதும் பெரிய அளவில் வரவேற்பு இருக்கும். கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் அஜித், விஜய்க்கு இணையாக புனித் ராஜ்குமாருக்கு கர்நாடகாவில் ரசிகர்கள் உள்ளனர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இவர் திடீரென உயிரிழந்த சம்பவம் அவரது ரசிகர்களை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த இந்திய திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. உடற்பயிற்சி மீது அதிக நாட்டம் கொண்ட புனித் ராஜ்குமார் வழக்கம் போல் அவரது வீட்டில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிர் பிரிந்தது. 46 படங்களில் நடித்திருந்த புனித் ராஜ்குமார் 47-வது படமாக 'ஜேம்ஸ்' திரைப்படத்தில் நடித்திருந்தார். இது தான் அவர் கடைசியாக நடித்த படமாகும். இந்த படம் அவரது பிறந்த நாளான மார்ச் 17-ம் தேதி வெளியானது.
கர்நாடகாவில் மட்டும் 'ஜேம்ஸ்' 500 திரையரங்குகளில் வெளியானது. கன்னடம் தவிர, தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம் என பிற மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு மொத்தம் 3,500 திரையரங்களில் 'ஜேம்ஸ்' வெளியிடப்பட்டது.
படம் வெளியான அன்று கர்நாடகாவில் அனைத்து திரையரங்குகளும் நிரம்பி வழிந்தன. திரையரங்குகளுக்குள் முண்டியடித்து சென்ற ரசிகர்களை கட்டுப்படுத்த போலீஸார் லேசான தடியடி வரை நடத்தினர். இனி நேரில் காண முடியாத புனித் ராஜ்குமாரை அவரது ரசிகர்கள் கண்ணீர் மல்க திரையில் கண்டு கொண்டாடி வருகின்றனர்.
மேலும் படிக்க | புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் விஜய் நேரில் அஞ்சலி!
இந்நிலையில், 'ஜேம்ஸ்' திரைப்படம் இதுவரை ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக திரையுலகில் இதுவரை கே.ஜி.எப் திரைப்படம் மட்டுமே 100 கோடி ரூபாய் வசூலித்து சாத்தித்துள்ளது. இதனிடையே 100 கோடி ரூபாய் கிளப்பில் புனித் ராஜ்குமாரின் 'ஜேம்ஸ்' படமும் இணைந்துள்ளதால் அவரது ரசிகர்கள் கொண்டாடித்தீர்த்து வருகின்றனர்.
மேலும் படிக்க | புனித் ராஜ்குமார் மறைவிற்கு அஜித் இரங்கல்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR