மாதவன் அனுப்பிய புகைப்படத்தால் கடுப்பான அவரது மச்சான்

நம்பி நாராயணன் கெட்டப்பில் மனைவியுடன் ரொமான்டிக்காக இருக்கும் புகைப்படத்தை அனுப்பியதை பார்த்த தன்னுடைய மச்சான் கடுப்பாகிவிட்டதாக மாதவன் காமெடியாக குறிப்பிடுள்ளார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 29, 2022, 03:48 PM IST
  • ராக்கெட்டரி படத்தின் புரோமோஷன்
  • மனைவியுடன் ரொமான்ஸ் செய்யும் மாதவன்
  • புகைப்படத்தை பார்த்து கடுப்பான மச்சான்
மாதவன் அனுப்பிய புகைப்படத்தால் கடுப்பான அவரது மச்சான்  title=

மாதவன் நடித்திருக்கும் ’ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’ திரைப்படம் ஜூலை 1 ஆம் தேதி வெளியாக உள்ளது. அவரே தயாரித்து நடித்திருக்கும் வெளியாக இரண்டு நாட்கள் மட்டுமே இருப்பதால், இந்தியா முழுவதும் தீவிரமாக புரோமோஷன் பணிகளில் பிஸியாக பங்கேற்றுள்ளார் மாதவன். இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கான் மற்றும் சூர்யா ஆகியோர் நடித்துள்ளனர். அந்தப் புகைப்படங்கள் அண்மையில் வெளியாகி, வைரலானது. 

மேலும் படிக்க | சூர்யாவை அழைக்கும் ஆஸ்கர் - தமிழ் சினிமாவுக்கு மேலும் ஒரு பெருமை

அதேபோல், பஞ்சாங்கம் குறித்து அவர் தெரிவித்த கருத்தும் சர்ச்சையாகி இணையவாசிகள் மாதவனை வறுத்தெடுத்தனர். இதனை மனமுவந்து ஏற்றுக் கொண்ட அவர், அறியாமையால் பேசியதற்கு கிடைத்த பரிசாக விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும் என பெருந்தன்மையாக டிவிட்டரில் தெரிவித்தார். இருப்பினும் அவரை நெட்டிசன்கள் விட்டதாக தெரியவில்லை. மாதவனாக வந்து வருத்தம் தெரிவித்தபோதும், அடுத்த கன்டென்ட் கிடைக்கும் வரைவிடமாட்டோம் என ஓயாமல் அவரை வறுத்தெடுக்கின்றனர். ஆனால், இதனையெல்லாம் கடந்து படம் ரிலீஸாக சில நாட்கள் மட்டுமே இருப்பதால் புரோமோஷன் பணிகளில் உள்ளார்.

டெல்லியில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் சார்பில் ராக்கெட்டரி படத்தின் சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்டது. இதில் நாட்டின் முன்னணி அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட நிலையில், மாதவனும் தன்னுடைய மனைவியுடன் கலந்து கொண்டார். இந்தப் படம் நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றையும், அவர் பட்ட இன்னல்களையும் தோலுரித்துக் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராக்கெட் தயாரிப்பில் அவர் செய்த புரட்சி மற்றும் அதற்காக நம்பி நாராயணன் பட்ட அவமானங்கள் எல்லாம் இந்தப் படத்தில் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த புரோமோஷன் பணிகள் எல்லாம் ஒருபுறம் இருக்க, வழக்கமான நையாண்டி சேட்டை ஒன்றையும் செய்துள்ளார்.

நம்பி நாராயணன் கெட்டப்பில் இருக்கும் அவர் மனைவியுடன் ரொமான்டிக்காக இருக்கும் புகைப்படத்தை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை தன்னுடைய மச்சானுக்கும் அனுப்பினாராம். அதனைப் பார்த்தவுடன் கடுப்பாகிவிட்டாராம். இதனை ஜாலியாக டிவிட்டரில் கூறியுள்ளார் மாதவன். என்ன நினைத்து அவர் காண்டானாரோ தெரியவில்லை? என்கிறார்கள் ரசிகர்கள். 

மேலும் படிக்க | ’தமன்னாவை சுத்தி சுத்தி பார்த்தேன்’ ராதாரவியின் சர்ச்சைப் பேச்சு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News