தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். முன்னாள் நடிகை மேனகாவின் மகளான இவர் குழந்தை கதாப்பாத்திரமாக திரையுலகிற்குள் அறிமுகமாகி, இப்போது பிரபல நடிகயாக வலம் வருகிறார்.
கீர்த்தி சுரேஷ்:
இது என்ன மாயம் படம் இவருக்கு முதல் படமாக இருந்தாலும் கீர்த்தியை தமிழ் ரசிகர்கள் அதிகமாக வைத்து கொண்டாடியது “உன் மேல ஒரு கண்ணு” பாடலுக்கு பிறகுதான். அந்த பாடலில் கண்களை மயக்கும் வசீகர அழகுடன் ஹீராேவை இவர் பார்க்கும் போது, தங்களை பார்ப்பது போல பலர் நினைத்து கொண்டனர். தொடர்ந்து ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், மகாநதி உள்ளிட்ட பல படங்களில் நடித்த இவர், இன்று பல தென்னிந்திய சினிமா ரசிகர்களின் ஃபேவரட் ஆக இருக்கிறார்.
கீர்த்தியால் உதயநிதிக்கு ராசி..
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஹாட் டாப்பிக்கா இருப்பதே, உதயநிதி ஸ்டாலின்தான். காரணம், இவர் துணை முதலமைச்சராக நியமிக்கப்படுவது குறித்த செய்தி மக்களிடையே பரவி வந்தது. இதையடுத்து, செப்டம்பர் 29ஆம் தேதியான இன்று, தனது மகனும் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலன் துறையின் அமைச்சராக பதவி வகிக்கும் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டு இருப்பதாக அறிவித்தார்.
உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆனதை அடுத்து, அதற்கு நடிகை கீர்த்தி சுரேஷ்தான் காரணம் என சிலர் இணையத்தில் கூறி வருகின்றனர். அது ஏன் தெரியுமா?
மேலும் படிக்க | உடல் எடையை குறைக்க கீர்த்தி சுரேஷ் தினமும் செய்த விஷயம்..எளிமையா இருக்கே..
காரணம்..
நடிகை கீர்த்தி சுரேஷும் உதயநிதியும் ஒன்றாக ‘மாமன்னன்’ படத்தில் நடித்திருந்தனர். இந்த படம்தான், அரசியலுக்கு வருவதற்கு முன்னர் உதயநிதி நடித்த கடைசி படமாகும். இப்போது அவர் துணை முதல்வராகி விட்டார். இதே போல கீர்த்தி, தெலுங்கு நடிகர் பவன் கல்யாணுடன் ஒரு படத்தில் நடித்திருந்தார். அந்த படம் 2018ஆம் ஆண்டில் வெளியானது. தற்போது ஆந்திராவின் துணை முதலமைச்சராக அவர் பதவி வகிக்கிறார். இதனால் கீர்த்தி சுரேஷின் ராசியால், இருவரும் துணை முதலமைச்சர் ஆனதாக பலர் சில மீம்ஸ்களை இணையத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
நயன்தாராவும்..
நடிகை நயன்தாராவும், தற்போது ஆந்திரா மற்றும் தமிழ் நாட்டின் துணை முதலமைச்சர்களாக பதவி வகிக்கும் பவன் கல்யாண்-உதயநிதியுடன் சேர்ந்து நடித்திருக்கிறார். அப்படிப்பார்த்தால், அவரும் ராசியான நாயகிதான் என சிலர் கமெண்டுகளில் தெரிவித்து வருகின்றனர்.
நெட்டிசன்களின் சேட்டை..
நம்மை சுற்றி என்ன பெரிதாக நடந்து கொண்டிருக்கிறதோ, அதை இணையத்தில் கலாய்ப்பதையே பலர் வழக்கமாக கொண்டிருக்கின்றனர். அப்படித்தான், உதயநிதி துணை முதலமைச்சராக மாறியிருப்பதையும் பலர் இப்படி கலாய்த்து வருகின்றனர். அந்த வகையில்தான் கீர்த்தி சுரேஷையும் உதயநிதியையும் வைத்து இப்படி மீம் போட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க | கீர்த்தி சுரேஷ் பாதி..தமன்னாவில் மீதி! யார் இந்த புது நடிகை? வைரலாகும் போட்டோஸ்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ