சென்னையில் தொடங்கிய இந்தியன் 2 சூட்டிங்; கமல் எப்போது கலந்து கொள்கிறார்?

இயக்குநர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் சென்னையில் தொடங்கியிருக்கும் நிலையில், இது கமல்ஹாசன் கலந்து கொள்ளவில்லை. 

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 24, 2022, 03:27 PM IST
  • இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கியது
  • கமல்ஹாசன் கலந்து கொள்ளவில்லை
சென்னையில் தொடங்கிய இந்தியன் 2 சூட்டிங்; கமல் எப்போது கலந்து கொள்கிறார்? title=

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. இயக்குநர் சங்கர் உள்ளிட்ட படப்பிடிப்பு குழுவினர் கலந்து கொண்டு பூஜையுடன் சூட்டிங்கை தொடங்கினர். பாபி சிம்ஹா மற்றும் நடிகர் ஜெயபிரகாஷ் ஆகியோர் நடித்த காட்சிகளை இயக்குநர் சங்கர் இன்று படமாக்கினார்.இதனை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் டிவிட்டரில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. மீண்டும் தொடங்கிய படப்பிடிப்பில் கமல்ஹாசன் கலந்து கொள்ளவிலை. அவர் தற்போது அமெரிக்காவில் இருக்கிறார். இந்தியன், தசாவதாரம் மற்றும் அவ்வை சண்முகி படங்களில் மேக்கப் ஆர்டிஸ்டாக பணியாற்றிய ஆஸ்கர் விருதுகளை வென்ற மேக்கப்மேன் வெஸ்ட்மோர் குடும்பத்தினரை சந்தித்தார். 

மைக்கேல் வெஸ்ட்மோரிடம் மேக்கப் தொடர்பாக ஆலோசனை நடத்திய அவர், விரைவில் இந்தியா திரும்ப இருக்கிறார். அவர் இந்தியா திரும்பிய பிறகு இந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார். சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்தியன் 2 படப்பிடிப்பு திடீரென ஏற்பட்ட விபத்து காரணமாக தடைபட்டது. அந்த படப்பிடிப்பில் தொழில்நுட்ப கலைஞர்கள் 3 பேர் உயிரிழந்த நிலையில், லைகா மற்றும் இயக்குநர் சங்கருக்கு இடையே மனக்கசப்பு உருவானது. இந்த பிரச்சனை பூதாகரமாக வெடித்ததால் படத்தை கைவிடும் நிலைக்கு இயக்குநர் சங்கர் மற்றும் லைகா நிறுவனம் சென்றது. நீதிமன்றம் மூலம் தீர்வு காணவும் லைகா நிறுவனம் முயற்சி செய்தது. ஆனால் அது பலனளிக்கவில்லை. 

சங்கர் ராம் சரணின் ஆர்சி 15 படத்தை இயக்க, கமல்ஹாசன் விக்ரம் படத்தில் கவனம் செலுத்தினார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் வசூல் ரீதியாக ராஜபாட்டை நடத்தியதால் மீண்டும் இந்தியன் 2 படத்தை எடுக்க ரெட் ஜெயண்ட் மூவீஸ் முன்வந்தது. உதயநிதி ஸ்டாலின் விக்ரம் வெற்றி விழாவில் பேசும்போது, இந்தியன் 2 படத்தை மீண்டும் தொடங்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். இந்நிலையில், ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்குவதை டிவிட்டரில் அறிவித்தது. அதன்படி சூட்டிங்கும் தொடங்கியிருக்கிறது. 

மேலும் படிக்க | என்ன நடக்கிறது வாரிசு படப்பிடிப்பில்? லீக் ஆனது விஜய் - ராஷ்மிகா ரொமான்ஸ் காட்சிகள்!

மேலும் படிக்க | கமல் இல்லாமல் தொடங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News