தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் இயக்குநர்களில் ஒருவர் தான் இயக்குநர் லோகேஷ் கனராஜ். இந்நிலையில் இவரைப் பற்றி யாருக்குமே தெரியாத சில சுவாரஸ்ய தகவல்களை இந்த கட்டுரையில் தெரிந்துக்கொள்வோம்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ்:
ஒரு வங்கியில் வேலை செய்து வந்துள்ள லோகேஷ் கனகராஜ் திரைப்பட இயக்குநர்களுக்கு பெரிய பாதையை அமைத்து கொடுத்த நிகழ்ச்சி, “நாளைய இயக்குநர்” நிகழ்ச்சியின் மூலம் தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கு அறிமுகமானவர்தான் லோகேஷ் கனகராஜ். பின் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தயாரித்த அவியல் என்னும் படத்தில் ஒரு சிறிய கதையை இயக்கி இயக்குனராக அவதரித்தார், லோகேஷ் கனகராஜ். அவியல் படத்திற்கு பின் 2017ஆம் ஆண்டு வெளியான ‘மாநகரம்’ தான் இவர் இயக்கிய முதல் படம். சிறு பட்ஜெட் படமாக வெளியான இத்திரைப்படம் பெரிய அளவில் விமர்சனம் ரீதியாக மக்களை கவர்ந்தது.
மேலும் படிக்க | பிக்பாஸ் நிகழ்ச்சியில் விசித்ரா சொன்ன அந்த ‘மாஸ்’ ஹீரோ யார்?
இதையடுத்து இவர் கார்த்தியை வைத்து “கைதி” படத்தை இயக்கினார். இந்த படம் இவருக்கு இயக்குநராகவும், திரைப்பட கலைஞராகவும் பெரிய லிஃப்ட் கொடுத்தது. இப்படத்தின் பிரமாண்ட வெற்றியின் மூலம் தனது மூன்றாவது படத்திலையே விஜய்-யை நாயகனாக கொண்டு 'மாஸ்டர்' படத்தினை இயக்கி தமிழ் முக்கிய முன்னணி இயக்குனர்களில் ஒருவராக மக்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பின் கமலை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார். இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இதைத் தொடர்ந்து சமீபத்தில் விஜய்யை வைத்து படத்தை இயக்கினார். இந்த படம் அதிரி புதிரி ஹிட் படமாக அமைந்துள்ளது.
எல் சி யு (LCU):
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஹாலிவுட் சினிமா தரத்திற்கு தமிழ் சினிமாவை உயர்த்தியுள்ளார். தனது ஒரு படத்திற்கும் மற்றொரு படத்திற்கும் சில ஒற்றுமைகளை திரைக்கதையில் வடிவமைத்து இயக்கி வருகிறார். கைதி படத்தின் தொடர்ச்சியாக விக்ரம், லியோ படம் என தனது அடுத்தடுத்த படங்களில் ஒவ்வொரு படத்தையும் இணைக்க திட்டமிட்டுள்ளார், லோகேஷ் கனகராஜ்.
ரஜினியுடன் கைகோர்த்துள்ள லோகேஷ்:
இதற்கிடையில் தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் "தலைவர் 171" அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து படம் இயக்குகிறார். அடுத்தவருடம் ரஜினி 171 படத்தின் படப்பிடிப்புகள் ஆரம்பமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே குறுகிய காலத்தில் வெற்றிக்கு இவரது பண்புகள் தான் காரணம் என்கின்றனர், நெருங்கி பழகியவர்கள்.
லோகேஷ் கனகராஜ் குறித்த சுவாரஸ்ய தகவல்:
பொதுவாக, உதவி இயக்குநர்கள் என்றாலே, அவர்களுக்கு சரியான மரியாதை கொடுக்காமல்தான் நடத்தப்படுவார்கள் என்று நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், லோகேஷ் கனகராஜ் தன்னிடம் பணிபுரியும் உதவி இயக்குநர்களை சிறப்பாக பார்த்துக்கொள்கிறார் என்று பல நிகழ்வுகளில் நாம் கேட்டதுண்டு. ஷூட்டிங்கில் எவ்வளவு பிசியாக இருந்தாலும், உதவி இயக்குநர்களை சாப்பிட அனுப்பிவிடுவது, அதுமட்டுமின்றி பல முறை தானே சாப்பாடு வாங்கி தருவது என்று பாராட்டப்படுகிறார் லோகேஷ். குறிப்பாக, எவ்வளவு டென்ஷன் இருந்தாலும் சரி, தங்களின் உதவி இயக்குநர்களை எல்லோரும் முன்பு திட்டாமல் தனியாக அழைத்து தவறை சுட்டிக்காட்டுகிறார் லோகேஷ். அதேபோல் தன்னை பெயர் சொல்லித்தான் அழைக்க வேண்டும், உடன் இருப்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது, மேடைகளில் உதவி இயக்குநர்களை பாராட்டுவது என்று தனது உதவி இயக்குநர்களை சமமாக நடத்துவார். எனவே இதனாலே இவர் வெகுவிரைவாக திரைத்துறையில் உச்சம் தொட காரணமாகும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி லோகேஷுக்கு ரஜினி வாய்ப்பு தர அவரது பண்புகளே முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க | இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ