வெடித்தது பட்டாஸ்! வெளியானது பட்டாஸ் படத்தின் டிரைலர்!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பட்டாஸ்’ படத்தின் டிரைலர் வெளியானது.

Last Updated : Jan 7, 2020, 10:49 AM IST
வெடித்தது பட்டாஸ்! வெளியானது பட்டாஸ் படத்தின் டிரைலர்! title=

துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பட்டாஸ்’ படத்தின் டிரைலர் வெளியானது.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நாயகனாக நடித்து வரும் படம் 'பட்டாஸ்'. இப்படத்தை எதிர் நீச்சல், காக்கிச்சட்டை, கொடி படங்களின் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். 

இத்திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை சினேகா நடிக்கின்றார். புதுப்பேட்டை திரைப்படத்திற்கு பின்னர் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கும் திரைப்படம் இதுவாகும். இவர்களுடன் மெஹ்ரின் பிர்ஜதா, நவீன் சந்திரா உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கை கோர்த்துள்ளனர். ஒரசாத பாடல் புகழ் விவேக் - மெர்வின் இசையில் இந்த திரைப்படத்தை சத்யஜோதி ப்ளிம்ஸ் தயாரிக்கின்றது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் இன்று காலை வெளியானது. டிரைலரை பார்த்த ரசிகர்கள் இதை கொண்டாடி வருகிறார்கள். 

 

 

Trending News