நேற்று படத்தின் அப்டேட்... இன்று பையனின் பெயர் அப்டேட் - உச்சக்கட்ட மகிழ்ச்சியில் அட்லீ!

Atlee - Priya Baby Boy Name: ஜவான் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியான அடுத்த நாளே, தனது குழந்தையின் பெயரை இயக்குநர் அட்லீயும், அவரது மனைவியும் பொதுவெளியில் அறிவித்துள்ளனர்.

Written by - Sudharsan G | Last Updated : May 7, 2023, 04:52 PM IST
  • பிரியா அட்லீக்கு கடந்தாண்டு டிசம்பர் மாதம் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
  • இந்த ஜோடிக்கு கடந்த ஜன. 31ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது.
  • ஜவான் படத்தின் ரிலீஸ் தேதியை நேற்று படக்குழு அறிவித்தது.
நேற்று படத்தின் அப்டேட்... இன்று பையனின் பெயர் அப்டேட் - உச்சக்கட்ட மகிழ்ச்சியில் அட்லீ! title=

Atlee - Priya Baby Boy Name: தமிழ் திரையுலகின் நட்சத்திர இயக்குநராக பார்க்கப்பட்டவர் இயக்குநர் அட்லீ. ராஜா ராணி திரைப்படம் மூலம் அறிமுகமான அவர், நடிகர் விஜய்யை வைத்து அடுத்தடுத்து மூன்று படங்களை இயக்கினார். தெறி, மெர்சல், பிகில் என மூன்று படங்களும் மொ ஹிட்டாக அமைந்தது. இதையடுத்து, முன்னணி இயக்குநர்களில் ஒருவராக பார்க்கப்பட்டார். எனினும், சமூக வலைதளங்களில் அவரின் படங்களின் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்ததாக கூறப்பட்டது. 

இதையொட்டி, அவர் பாலிவுட் பக்கம் சாய்ந்தார். தற்போது அவர் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து "ஜவான் " என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தியாவின் உச்ச நட்சத்திரமாக பார்க்கப்படும் ஷாருக்கான் இப்படம் பெரும் புகழை பெற்று தரும் எனவும் பாலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. 

ஜவானும்... குழந்தையும்...

அந்த வகையில், தொடர்ந்து இழுபறியில் இருந்து இப்படத்தின் ரிலீஸ் தேதி நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகும் இப்படம் வரும் செப். 7ஆம் தேதி வெளியாகும் என படக்குழு வெளியிட்ட வீடியோ மூலம் அறிவிக்கப்பட்டது. 

மேலும் படிக்க | Jawan Update: பொறுத்தது போதும்..வந்தாச்சு ஜவான் பட அப்டேட்..ரிலீஸ் எப்போது தெரியுமா?

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Priya Mohan (@priyaatlee)

ஜவான் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியான அடுத்த நாளே, தனது குழந்தையின் பெயரையும் அவர் பொதுவெளியில் அறிவித்துள்ளார். பிரியா - அட்லீ ஜோடிக்கு கடந்த ஜன. 31ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்தாலும், இந்த ஜோடி தங்களது குழந்தையின் முகத்தையும், பெயரையும் பொதுவெளியில் காட்டாமல் தவிர்த்து வந்தனர். 

பிரபலங்கள் கமெண்ட்

இந்நிலையில், தங்களது குழந்தையின் பெயர் 'மீர்' என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, பிரியா அட்லீ, இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்ட பதிவில்,"ஆம், குழந்தையின் பெயர் மீர். எங்களின் குட்டி தேவதையின் பெயரை அறிவிப்பதில் பெரு மகிழ்ச்சியாக உள்ளது" என குறிப்பிட்டுள்ளனர். 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Priya Mohan (@priyaatlee)

இந்த பதிவை அடுத்து இன்ஸ்டாகிராமில் பலரும் அவர்களுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். பாடகியும், ஜீ.வி. பிரகாஷ்குமாரின் மனைவியுமான சைந்தவி; நிகழ்ச்சி தொகுப்பாளரும், சாந்தனுவின் மனைவியுமான கீர்த்தி விஜய் ஆகியோர் கமெண்டில் வாழ்த்துகளை குறிப்பிட்டுள்ளனர். கடந்தாண்டு டிசம்பர் மாதம், தான் கர்ப்பமாக இருப்பதை பொதுவெளியில் பிரியா அட்லீ அறிவித்தார். தொடர்ந்து, அதே மாதத்தில் நடைபெற்ற வளைகாப்பு விழாவில் நடிகர் விஜய் உள்ளிட்ட பிரபலங்களும் கலந்துகொண்டது நினைவுக்கூரத்தக்கது.

இயக்குநர் அட்லீ, நடிகையான பிரியாவை 2014ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். இயக்கம் மட்டுமின்றி, அட்லீ அவரது மனைவி பிரியாவுடன் இணைந்து 'A for Apple Productions' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி தயாரிப்பு பணிகளிலும் ஈடுபட்டு வந்தார்.  அவரது தயாரிப்பின்கீழ் வெளியான 'சங்கிலி புங்கிலி கதவ தொற', 'அந்தகாரம்' திரைப்படங்கள் நல்ல வரவேற்பினை பெற்றன. அடுத்தடுத்து படங்களை தயாரிக்கும் பணியிலும் அவர் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | விஜய்யின் லியோ படத்தால் தள்ளி போகும் அட்லீயின் ஜவான்! ஏன் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News