பீஸ்ட் படமும் கூர்கா படமும் ஒன்றா? கொந்தளித்த இயக்குனர்!

விஜய்யின் பீஸ்ட் படமும், யோகி பாபு நடித்த கூர்கா படமும் ஒன்றல்ல என்று கூர்கா படத்தின் இயக்குனர் கூறியுள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : May 2, 2022, 01:58 PM IST
  • பீஸ்ட் படம் ஏப்ரல் 13ம் தேதி வெளியானது.
  • எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.
  • கூர்க்கா படத்துடன் ஒப்பிட பட்டது.
பீஸ்ட் படமும் கூர்கா படமும் ஒன்றா? கொந்தளித்த இயக்குனர்! title=

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'பீஸ்ட்'.  படம் வெளியாவதற்கு முன்னர் வந்த அப்டேட்டுகள் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து படத்தை பற்றி அதிகம் கனவு கண்ட ரசிகர்களுக்கு படம் பெரிய அதிருப்தியை அளித்தது.  இருப்பினும் இப்படத்திற்கு சில நேர்மறையான பாராட்டுக்களும் கிடைத்தது, கலவையான விமர்சனங்களை பெற்ற இப்படத்தை பலரும் 'கூர்கா' படத்தின் காபி என்று கிண்டலடித்து வந்தனர்.  கடந்த 2019ம் ஆண்டு யோகி பாபு நடிப்பில் வெளியான காமெடி திரைப்படம் கூர்கா, இப்படத்தில் பீஸ்ட் படத்தில் உள்ளதை போன்றே தீவிரவாதிகள் ஷாப்பிங் மாலை ஹைஜாக் செய்வார்கள், அவர்களிடம் இருந்து மக்களை யோகி பாபு காப்பாற்றுவார், அதேபோல பீஸ்ட் படத்தில் விஜய் செய்தார். அதனால் இது கூர்காவின் காபி தான் இப்படத்தை ட்ரோல் செய்து வந்தனர்.

samanton

மேலும் படிக்க | பீஸ்ட் போலவே ஏகே62-வும் Experimental படமா? விக்னேஷ் சிவன் பதில்!

இந்நிலையில் கூர்கா படத்தின் இயக்குனர் சாம் ஆண்டன் பீஸ்ட் படம் குறித்து சமீபத்திய பேட்டியொன்றில் கூறியுள்ளார்.  அவர் கூறியதாவது, நான் பீஸ்ட் படத்தை இதுவரை மூன்று தடவை பார்த்து இருக்கிறேன், தளபதி விஜய் ஒரு பெரிய நட்சத்திரம் அப்படி இருக்கையில் நீங்கள் எப்படி விஜயின் பீஸ்ட் படத்தை, கூர்கா படத்தோடு ஒப்பிடுகிறீர்கள்.  இந்த இரண்டு படங்களுமே வெவ்வேறு வகையில் உருவானவை, அவர் இப்படத்தில் புதுவிதமாக முயற்சி செய்து இருக்கிறார் என்று கூறியுள்ளார்.  மேலும் அவர் கூறுகையில், எனக்கு அவர் நடித்ததில் மிகவும் பிடித்த படம் 'புலி', அதில் அவர் வித்தியாசமாக நடித்து இருக்கிறார், அதேபோல போல தான் இப்படத்திலும் செய்துள்ளார், இதுவரை அவர் இதுபோன்ற ஹைஜாக் கதைக்களத்தில் நடித்ததில்லை, புதிதாக இதில் நடித்துள்ளார், அதை நாம் வரவேற்கலாம் என்று கூறியுள்ளார்.

அதனைத்தொடர்ந்து பேசுகையில், நான் பீஸ்ட் படத்தை பார்த்து மிரண்டுவிட்டேன், பிளைட் ஓட்டும் காட்சிகள், சண்டை காட்சிகள் போன்றவை அற்புதமாக இருந்தன.  கேப்டன் பிரபாகரன் படத்தையும், புஷ்பா படத்தையும் ஒப்பிட்டு கூறுவீர்களா, கண்டிப்பாக எந்த படத்தையும் ஒப்பிட்டு பார்க்கமுடியாது.  ஒவ்வொரு படமும் ஒவ்வொரு தனித்துவத்துடன் தான் வருகிறது என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க | எந்த ஓடிடியில் வெளியாகிறது கேஜிஎஃப் 2... ஓடிடி வியாபாரத்திலும் சாதனை?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News