கார் ஓட்டும் போது நான் மது போதையில் இல்லை என நடிகை காயத்ரி ரகுராம் கண்டனம் தெரிவித்துள்ளார்!
சென்னை அடையாறு சத்யா ஸ்டுடியோ அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டபோது, அந்த காரை ஓட்டிவந்தவர் நடிகை காயத்ரி ரகுராம் என தெரியவந்தது, போலீசார் அவரிடம் ஓட்டுநர் உரிமத்தை கேட்டுள்ளனர். ஆனால் அவரிடம் ஓட்டுநர் உரிமம் இல்லாத நிலையில் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இறுதியில் தான் மது போதையில் காரை ஓட்டியதை காயத்ரி ரகுராம் ஒப்புக்கொண்டதாகவும், அதன் பின் மது போதையில் கார் ஒட்டியதற்கும், ஓட்டுநர் உரிமம் இல்லாததற்கும் 3,500 ரூபாய் அபராதம் செலுத்தியதாகவும், தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் தான் கார் ஓட்டும் போது மது போதையில் இல்லை, தான் மீது பொய்குற்றம் சாற்றுவதக்காக இப்படிப்பட்ட பலியை சுமத்தியுள்ளதாகவும் ட்விட்டர் வாயிலாக விளக்கம் தெரிவித்துள்ளார். தம் மீது திட்டமிட்டு அவதூறு பரபரப்பபட்டதாகவும் காயத்ரி ரகுராம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
— Gayathri Raguramm (@gayathriraguram) November 26, 2018