சினிமா நட்சத்திரங்கள் பலரை நேர்காணலில் பேட்டி எடுத்து பிரபலமானவர், ரம்யா. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியது மட்டுமன்றி, தான் பேட்டி காணும் நடிகர்-நடிகைகளுடனும் நல்ல நட்பு பாராட்டுபவர் இவர். ஆரம்பத்தில் நிகழ்ச்சிகளில் மட்டும் தொகுப்பாளினியிாக பணிபுரிந்த ரம்யா, தற்போது பல மேடை நிகழ்ச்சிகளையும் ஹோஸ்ட் செய்து வருகிறார். சமீபத்தில் நட்ந்த ஹாரீஸ் ஜெயராஜ்ஜின் இசை நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார். இவர்தான் சில நாட்களுக்கு முன்னர் விபத்தில் சிக்கினார்.
உடற்பயிற்சியில் கவனம் செலுத்தும் ரம்யா..
தொகுப்பாளினியாக மட்டுமன்றி சில படங்களிலும் சிறுசிறு கதாப்பாத்திரங்களில் ரம்யா நடித்து வருகிறார். சில புத்தகங்களையும் எழுதி இருக்கிறார். இவர், சமீப காலமாக உடல் எடையை குறைப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக கடுமையான வர்க்-அவுட் செய்வது. ஹேவியான வெய்ட் லிஃப்டிங் செய்வது போன்ற பயிற்சிகளிலும் ஈடுபடுகிறார். சில நாட்களுக்கு முன்னர் 2005ஆம் ஆண்டில் தான் 66 கிலோ எடையில் இருந்ததாகவும் இப்போது 54 கிலோவிற்கு வந்துவிட்டதாகவும் பதிவிட்டிருந்தார். இதை செய்து முடிக்க தனக்கு 18 ஆண்டுகள்தான் தேவைப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
மேலும் படிக்க | தமிழ் சினிமாவில் இத்தனை ‘வாரிசு’ நடிகர்களா..! முடிவே இல்லாமல் நீளும் லிஸ்ட்..!
திடீர் விபத்து..
ரம்யா, உடல் எடையை குறைப்பதற்காக வீட்டில் பயிற்சி செய்வது மட்டுமன்றி ஜிம்மிற்கும் சென்று வருகிறார். அப்போதுதான் அவருக்கு இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. தசைகளை மேம்படுத்தும் பயிற்சியை மேற்காெண்ட போது இடுப்பில் பொருத்தப்பட்டிருந்த உடற்பயிற்சி கருவி அவரது முகத்தில் உருண்டு விழுந்துள்ளது. இதனால், அவரது தாடை பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.
“மூச்சு விட முடியவில்லை..”
இந்த சம்பவம் குறித்து ரம்யா ஒரு பதிவினை வெளியிட்டிருந்தார். அதில், மிகவும் வெயிட்டான அந்த கருவி தன் கழுத்து பகுதியில் விழுந்ததால் அதன் பாதி எடையை உணர்ந்ததாகவும் அதனால் தன்னால் மூச்சிவிட முடியாமல் போனதாகவும் கூறியுள்ளார். உடனிருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக தனக்கு ஓடி வந்து உதவி செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால், தனக்கு எந்த பின்விளைவுகும் ஏற்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
பதறிப்பாேன ரசிகர்கள்..
ரம்யாவிற்கு அடிப்பட்டுள்ள விஷயத்தை கேள்விப்பட்டவுடன் ரசிகர்கள் பதறிப்போய்விட்டனர். இதுகுறித்த பதிவை அவரே வெளியிட்டதை தொடர்ந்து அனைவரும் நிம்மதியடைந்தனர்.
தொகுப்பாளினி-நடிகை..
ரம்யா, பல பிரபலமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். கலக்க போவது யாரு, நம்ம வீட்டு கல்யாணம், உங்களில் யார் அடுத்த பிரபுதேவா போன்ற பல நிகழ்ச்சிகள் மூலம் இவர் ரசிகர்களுக்கு பிடித்த தொகுப்பாளினியாக மாறினார். மொழி, மாஸ் என்கிற மாசிலாமணி, கேம் ஓவர், வனமகன், மாஸ்டர், ஓ காதல் கண்மணி போன்ற பிரபலமான படங்களிலும் துணை கதாப்பாத்திரமாக நடித்துள்ளார். இவர், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாலும் சரி, படங்களில் நடித்தாலும் சரி அதை மிகவும் பொறுமையாக ஆராய்ந்துதான் தேர்ந்தெடுப்பார். இதனாலேயே இவரை திரை பிரபலங்கள் உள்பட பலருக்கு மிகவும் பிடிக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ