மநீம கட்சியில் இணைந்த பிரபல நடிகை.. முதல் ட்வீட்டே இப்படியா?

Vinodhini joins Makkal Needhi Maiam: பிரபல திரைப்பட நடிகை வினோதினி வைத்தியநாதன், கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்துள்ளார்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 14, 2023, 07:41 AM IST
  • அரசியல் தொடர்பான கருத்துக்களை கூறி வரும் வினோதினி.
  • மக்கள் நீதி மய்யம் கட்சியில் சேர்ந்த பிரபல நடிகை வினோதினி.
மநீம கட்சியில் இணைந்த பிரபல நடிகை.. முதல் ட்வீட்டே இப்படியா? title=

மேடை நாடகத்தில் இருந்து திரைத்துறைக்கு வந்தவர் நடிகை வினோதினி. கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான காஞ்சிவரம் திரைப்படத்தின் மூலமாக நடிகையான அறிமுகமானார் நடிகை வினோதினி. இவர் அதன் பிறகு ஜெய் நடித்த ‘எங்கேயும் எப்போதும்’, யமுனா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகிர்தண்டா, பிசாசு, ஓகே கண்மனி, ராட்சசன், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். அதேபோல் சின்னத்திரையில் ஆனந்த ராகம் தொடரில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

நடிப்பு மட்டுமல்லாமல் அவ்வப்போது அரசியல் தொடர்பான கருத்துக்களை கூறி வரும் வினோதினி, நாட்டில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகள் குறித்த வெளிப்படையாக பல கருத்துக்களை சொல்வதும், அவற்றை கிண்டலடித்து வீடியோ வெளியிடுவதும் வைத்து வருகிறார். அதேபோல் ஜிஎஸ்டி விவகாரம், அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பேச்சு, சமீபத்திய மல்யுத்த வீரர்களின் போராட்டம் பற்றிய பாஜக தலைவரின் சர்ச்சை கருத்து குறித்தெல்லாம் விமர்சித்து கிண்டலாக வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இது மிகப்பெரிய அளவில் வைரலானது. இதனையடுத்து  இந்திய ரூபாயை விட அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து விட்டதை விமர்சித்து அடுத்த வீடியோவை வெளியிட்டார். இதுவும் இணையவாசிகள் இடையே வைரலானது. 

மேலும் படிக்க | ‘எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும்..’ பிரபல நடிகருடனான காதலை உறுதி செய்த தமன்னா?

இந்த நிலைகயில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை சந்தித்த வினோதினி தற்போது அக்கட்சியில் இணைத்துக் கொண்டுள்ளார். மநீம-வில் இணைந்த கையோடு ஒரு ட்வீட்டையும் பதிவு செய்துள்ளார். இந்த பதிவி தற்போது வைரலாகி வருகின்றது. அதன்படி இந்த பதிவில்,

அஞ்ஞானவாதி: நீ படைச்ச எல்லாருக்கிட்டையும் போயி டேய் நீங்க எல்லாரும் கடவுள்தாண்டா, அதுக்கு எதுக்குடா உங்களுக்குள்ள சண்ட போட்டுக்குறீங்கன்னு சொல்லிட்டிருக்கேன் சாமி. கடவுள் டு அஞ்ஞானவாதி: மய்யத்துல என்ன பொறுப்புல இருக்க?

அஞ்ஞானவாதி: இருக்கேங்குற பொறுப்புல இருக்கேன் சாமி. கடவுள் டு அஞ்ஞானவாதி: சரி, நீ பிறப்பால் இந்து.. இந்து மதக்கொள்கைய அடிப்படையா கொண்ட கட்சிக்குப் போயிருக்கலாமே?

அஞ்ஞானவாதி: வாரத்துக்கு ஒரு முறை கள்ள ஆடியோ வீடியோ ரெக்கார்டிங் இருக்கான்னு வீட்ட, காரெல்லாம் debug பண்றதுக்கு காசில்ல சாமி. கடவுள் டு

அஞ்ஞானவாதி: அப்போ பகுத்தறிவு பேசுற கட்சி? அஞ்ஞானவாதி: பகுத்தறிவா? அப்படினா என்னன்னு கேக்குறாங்க சாமி. அதுலயும் யாகம்லாம் செய்யுறாங்க. கடவுள் டு

அஞ்ஞானவாதி: அப்போ கரப்ஷன்? மதவாதப் பிரிவினை?

அஞ்ஞானவாதி: எந்தப்பக்கம் நடந்தாலும் குரல் கொடுப்பேன் சாமி. கடவுள் டு அஞ்ஞானவாதி: சரி, அப்போ ஏன் மய்யம்? ஒரு சீட்டுகூட இல்லையே?

அஞ்ஞானவாதி: சீட்டு குலுக்கிப்போட்டு இந்த பதவி எடுத்துக்கோ அந்தப்பதவி எடுத்துக்கோங்குறதுக்கு இங்க வாரிசு அரசியல் இல்லையே சாமி. சார்ஜ் சீட் செய்யப்பட்ட ஆளுங்களும் இல்லையே சாமி… சீட்டு விளையாடுறத ஆதரிக்கிற கூட்டமும்… கடவுள்: போதும் போதும்… சீட் என்று மூன்று முறைக்கு மேல் சொல்லியதால் நீ ஆட்டத்திலிருந்து விலக்கப்பட்டாய். அஞ்ஞானவாதி: இப்போதான் ஆட்டமே ஆரம்பிக்கிறது சாமி. ஆரம்பிக்கலாங்களா? என தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க | உதயநிதியுடன் மோதும் அமீர்: வெளியானது ‘உயிர் தமிழுக்கு’ படத்தின் அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News