கோலிவுட்டின் பிரபலமான இசையமைப்பாளர்களுள் ஒருவர், ஹாரிஸ் ஜெயராஜ். ரஜினி, கமல், விஜய், அஜித் என பலரது படங்களுக்கு இசையமைத்துள்ளார். 90’ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்த பல பாடல்களுக்கு இசையமைத்த பெருமைையை பெற்றவர் ஹாரிஸ்.
இசையுலகின் செல்லப்பிள்ளை..
சென்னையில் பிறந்து வளர்ந்து ஆறு வயதிலேயே கர்நாடக சங்கீதம் பயின்றவர், ஹாரிஸ். எல்லா இசையமைப்பாளர்களையும் போல சிறுவயதில் இசை ஆர்வத்தால் தூண்டப்பட்டு சினிமாவிற்குள் வந்தவர் இவர். இவர் இசையில் வெளியான பல பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளன. 90’ஸ் முதல் இன்றுவரை ட்ரெண்டில் இருக்கும் இசையை ரசிகர்களுக்கு பிடித்தவாறு வழங்குவதில் கில்லாடி, ஹாரிஸ். இவர், சமீப காகலமாக சினிமாவில் இசையமைப்பதை தாண்டி தனியாக சில இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.
மேலும் படிக்க | சினிமாவிற்கு 'குட்-பை’ சொல்லும் லோகேஷ்? இயக்குநரின் ‘இந்த’ முடிவால் ரசிகர்கள் சோகம்!
வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சி..
இந்திய சினிமாவின் பிரபலமான இசைக்கலைஞர்கள் உலக நாடுகளுக்கு சென்று இசை நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம். தமிழ் திரையுலகின் ராக்ஸ்டார் என்று அழைக்கப்படும் அனிருத் ஜெர்மனி, நியூ யார்க் உள்ளிட்ட பல உலக நாடுகளில் தனது இசை நிகழ்ச்சியினை நடத்தியுள்ளார். இதற்கு டிக்கட்டுகளும் மளமளவென விற்று தீர்ந்தன. இதற்கு முன்னர், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், இந்தி பாடகர் அர்ஜித் சிங் உள்ளிட்ட பலர் இசை நிகழ்ச்சிகளை நடத்தினர். இவர்களைப்போலவே ஹாரிஸ் ஜெயராஜ்ஜும் கான்ஸர்டுகளை நடத்தி வருகிறார்.
4 மாதங்களில் 4 நிகழ்ச்சிகள்..
ஹாரிஸ் ஜெயராஜ் மலேசியாவில் 4 மாதங்களுக்குள் 4 இசைக்கச்சேரிகள் நடத்தியுள்ளார். இவற்றின் அனைத்து டிக்கட்டுகளும் விற்பனையாகி உலக சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஹாரிஸ் ஜெயராஜின் மகன் நிக்கோலஸ் மற்றும் பாடகர்கள் கார்த்திக், கிரிஷ், ஹரிணி, ஹரிசரண், நரேஷ் ஐயர் மற்றும் பலர் கோலாலம்பூரில் ரசிகர்களால் நிரம்பிய ஆடிட்டோரியத்தில் இசைக்கச்சேரி நடத்தி அசத்தினர். இந்த நிகழ்ச்சியில் அதிமுக செய்தித் தொடர்பாளர் அப்சரா ரெட்டி, திரைப்பட இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் மற்றும் மலேசியாவின் முன்னணி தொழிலதிபர்களும் கலந்து கொண்டனர். இதனையடுத்து டத்தோ அப்துல் மாலிக் மற்றும் சுபைர் ஆகியோர் மேலும் 3 இசைகச்சேரிகளை ஹாரிஸ் ஜெயராஜுடன் இணைந்து நடத்துவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
“200 ரூபாய் சம்பளத்தில் ஆரம்பித்தது…”
ஹாரிஸ் ஜெயராஜ் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது தனது ஆரம்ப திரையுலக வாழ்க்கையை பற்றி பேசினார். அப்போது, “என் சினிமா வாழ்க்கைை 200 ரூபாய் சம்பளத்தில் ஆரம்பித்தேன்..” என கூறினார். யுவன் சங்கர் ராஜா, இளையராஜா, ஏ.ஆர் ரஹ்மான் உள்ளிட்ட பலரிடம் இசை இயக்குநராக பணியாற்றியுள்ளதாகவும் அதற்கு அவர்களிடம் சம்பளமும் பெற்றுள்ளதாகவும் கூறினார்.
நடனமாடிய ஹாரிஸ்..
சமீபத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் மலேசியாவில் இசை நிகழ்ச்சியினை நடத்தினார். அப்போது “டங்க மாரி ஊதாரி..” பாடலுக்கு க்யூட்டாக நடனமாடினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது.
இதுவரை பாடியதே இல்லை…
அன்றைய இளையராஜா தொட்டு..இடையில் இசைப்புயலில் இருந்து..தற்போதையை அனிருத் வரை பலரும் தாங்கள் இசைக்கும் பாடல்களுக்கு தங்கள் குரலிலேயே பாடுவதுண்டு. ஆனால், ஹாரிஸ் ஜெயராஜ் தான் இயக்கிய ஒரு படத்தில் கூட பாடல் பாடியதில்லை என கூறப்படுகிறது. எல்லா பாடல்களுக்கும் இசையமைப்பதோடு சரி. இவர் நடத்தும் இசை நிகழ்ச்சிகளிலும் பியானோ அல்லது கீ-போர்டினை இசைப்பது போன்ற வேலைகளிலேயே ஈடுபடுவார். சிலர் இவரது பாடல்களின் இசை ஒரே மாதிரியாக இருக்கிறது என கூறினாலும் அதை இவர் கண்டுகொள்வதில்லை.
மேலும் படிக்க | 1500 படங்களில் பணியாற்றிய திரைப்பிரபலம் திடீர் மரணம்..! ரசிகர்கள் இரங்கல்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ