நடிகர் சீயான் விக்ரமின் சொத்து மதிப்பு விவரம்: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான நடிகர் சீயான் விக்ரம் சொத்து மதிப்பு எவ்வளவு குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
நடிகர் சீயான் விக்ரம்:
தமிழ் சினிமாவின் திறமை மிகு நடிகர்களுள் ஒருவர் விக்ரம். கடின உழைப்பு, விடா முயற்சி, கதைகளை தேர்ந்தெடுத்தல் போன்ற பல விஷயங்களால் பிற ஹீரோக்களை விட இவர் தனித்து காணப்படுகிறார். பல்வேறு கஷ்டங்கள், மற்றும் வேதனைகளை கடந்து தான் இந்த நிலைக்கு வந்தார். இவர் நடிகராக அறிமுகமாவதற்கு முன்பே ஒரு டப்பிங் கலைஞராக சினிமாவில் தன்னுடைய பணியை துவங்கினார். இதை தொடந்து, கடந்த 1990 ஆம் ஆண்டு 'என் காதல் கண்மணி' என்கிற படத்தின் மூலம் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து 1991ல் ‘தந்து விட்டேன் என்னை’ படத்தில் நடித்தார், அதன்பிறகு எஸ். பி. முத்துராமன் அவர்களின் படமான ‘காவல் கீதம்’ (1992) மற்றும் பி. சி. ஸ்ரீராம் அவர்களின் படமான ‘மீரா’ (1992) போன்ற படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. அதன் பின்னர், இரண்டாண்டுகள் தெலுங்கு மற்றும் மலையாளத் திரையுலகில் பிஸியாக இருந்த அவர், 1994 ஆம் ஆண்டில் ‘புதிய மன்னர்கள்’ என்ற படம் மூலமாக மீண்டும் தமிழுக்கு வந்தார். அப்படம், எதிர்பார்த்த வெற்றியைத் தராததால், மீண்டும் தெலுங்கு மற்றும் மலையாளத்தில் தொடர்ந்தயார். 1997 ஆம் ஆண்டில், ‘உல்லாசம்’ என்ற படத்தில், அஜீத்குமாருடன் இணைந்து நடித்தார். அதன் பின்னர், கண்களின் வார்த்தைகள், ஹௌஸ்ஃபுல் போன்ற படங்களில் நடித்தார், இருப்பினும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை இவரால் பெற முடியவில்லை.
மேலும் படிக்க | ஜெய் - அருண்ராஜா கூட்டணியில் லேபிள் வெப் சீரிஸ்! சிறப்பம்சங்கள் என்ன?
சேது மூலம் ஹிட்டான விக்ரம்:
இதனிடையே கடந்த 1999 ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் 'சேது' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ரிஸ்க் எடுத்து இந்த படத்தில் நடித்தது மட்டும் இன்றி, இப்படத்தின் வெற்றி விக்ரமை மற்றொரு தளத்திற்கு கொண்டு சென்றது. இதன் பிறகு இவர் நடித்த அனைத்து படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. சேது படத்திற்கு பிறகு சிறகுகள், விண்ணுக்கும் மண்ணுக்கும், தில், காசி, ஜெமினி, சாமுராய், கிங், காதல் சடுகுடு, சாமி, பிதாமகன், அருள், அந்நியன், மஜா, பீமா, கந்தசாமி, தெய்வத் திருமகள் போன்ற ஹிட் படங்களை வரிசையாக கொடுத்தார்.
57 வயதிலும் செம்ம ஸ்டைலிஷ் விக்ரம்:
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்து வரும் விக்ரம், தற்போது கவுதம் வாசுதேவன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் நடிதிருக்கிறார். இந்த திரைப்படம் அடுத்த மாதம் நவம்பர் 24 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், பா ரஞ்சித் இயக்கத்தில் இவர் நடித்துள்ள தங்கலான் படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
நடிகர் சீயான் விக்ரம் சம்பளம்:
இதனிடையே விக்ரம் தற்போது நடித்து வரும் படங்களுக்கு 25 கோடி முதல் 35 கோடி வரை சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது. மேலும் சென்னையில் இவருக்கு சொந்தமாக சில வீடுகள் உள்ளது. அதுமட்டுமின்றி இவர் 5க்கும் மேற்பட்ட சொகுசு கார்களை வைத்துள்ளார்.
நடிகர் சீயான் விக்ரம் சொத்து மதிப்பு:
இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி விக்ரம் சுமார் 150 கோடி சொத்துக்கு அதிபதி என கூறப்படுகிறது. மேலும் தன்னுடைய வீட்டிலேயே ஜிம் போன்ற வசதிகளுடன் வீட்டை கட்டமைத்துள்ளார். இந்த தகவல் வெளியான முதல் தற்போது வெறிய அளவில் வைரலாகி வருகின்றது.
மேலும் படிக்க | மலை போல் காசை குவித்து வைத்திருக்கும் த்ரிஷா.. சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ