மாறனை தொடர்ந்து தனுஷின் அடுத்த படம் தியேட்டரா, ஓடிடியா?

தனுஷ் நடிக்கும் திருச்சிற்றபலம் படம் ஜூலை மாதம் வெளியாகும் என்று தகவல்கள் கூறுகிறது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 19, 2022, 09:16 AM IST
மாறனை தொடர்ந்து தனுஷின் அடுத்த படம் தியேட்டரா, ஓடிடியா? title=

இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள 'திருச்சிற்றம்பலம்' படத்தின் படப்பிடிப்பு முடிந்து விரைவில் வெளியாகவுள்ளது.  'யாரடி நீ மோகினி', 'குட்டி', 'உத்தமபுத்திரன்' படங்களை தொடர்ந்து நான்காவது முறையாக இந்த 'திருச்சிற்றம்பலம்' படத்தின் மூலம் தனுஷ் - மித்ரன் ஜவஹர் கூட்டணி இணைந்துள்ளது.  இப்படத்தில் ராஷி கண்ணா, பிரியா பவானி ஷங்கர் மற்றும் நித்யா மேனன், பிரகாஷ் ராஜ் மற்றும் பாரதிராஜா போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்துள்ளனர்.  

மேலும் படிக்க | பீஸ்ட் இரண்டாம் சிங்கிள் 'ஜாலியோ ஜிம்கானாவிற்கு' இதுதான் அர்த்தமா?

தனுஷ் நடிக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.  இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்து இருக்கிறார், ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு இந்த திரைப்படத்தின் மூலம் தனுஷ்-அனிரூத் கூட்டணி இப்படத்தில் இணைந்துள்ளது.  இவர்கள் இருவரின் கூட்டணியில் வெளிவரப்போகும் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு பெருகியுள்ளது.  இந்த படம் இரண்டு காலகட்டங்களில் நடக்கும் கதையை கொண்டுள்ளது.  ஒன்று கதாநாயகனின் கல்லூரி நாட்கள் மற்றொன்று கதாநாயகனின் கல்லூரிக்கு பிந்தைய வாழ்க்கை என அமைந்துள்ளது, இளமை பருவத்தில் கதாநாயகனுக்கு இரண்டு காதல் உள்ளது.  

சமீபத்தில் தனுஷ் நடிப்பில், கார்த்திக் நரேன் இயக்கத்தில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான 'மாறன்' படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.  சமீப காலங்களாக தனுஷின் படங்கள் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.  அந்த வகையில் தனுஷின் திருச்சிற்றம்பலம் படமும் ரசிகர்களிடம் ஆவலை ஏற்படுத்தி இருக்கிறது.  தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸ் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.  அதாவது மித்ரன் ஜவகர்- தனுஷ் கூட்டணியில் உருவாகியுள்ள இந்த 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் இந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க | ஐஸ்வர்யா தோழியா? தனுஷ் வாழ்த்தால் வெடித்த சர்ச்சை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News