Dhanush 43: தனுஷ் 43 படத்தின் புதிய அப்டேட் வெளியீடு

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் D43 படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 25, 2021, 08:48 PM IST
Dhanush 43: தனுஷ் 43 படத்தின் புதிய அப்டேட் வெளியீடு title=

இயக்குனர்  கார்த்திக் நரேன் அடுத்ததாக தனுஷின் 43வது படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகனன் நடிக்க உள்ளார். 

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, கிருஷ்ணகுமார் ஆகியோர் நடிக்கிறார்கள். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் (GV Prakash) இசையமைக்கிறார். தனுஷ் 43 (Dhanush) படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது. 

ALSO READ | Dhanush New Tweet: உருக்கமான பதிவிட்ட அப்பா தனுஷ்; வைரலாகும் பதிவு

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்க இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இதற்கிடையில் தி க்ரே மேன் படப்பிடிப்புகளுக்காக அமெரிக்கா சென்றார் தனுஷ். அவர், நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் கர்ணன் வெளியானது, கடந்த வாரம் ஜகமே தந்திரம் வெளியானது. ஆனால், இப்படங்களின் புரொமொஷனுக்காகக்கூட தனுஷ் தமிழகம் வரவில்லை. தற்போது, ’தி க்ரே மேன்’ படப்பிடிப்பு முடிந்துவிட்டதால், தனுஷ் தமிழகம் வரவிருக்கிறார்.

இதனை, உறுதி செய்துள்ளது தனுஷ் 43 படத்தை தயாரிக்கும் சத்யஜோதி ஃபிலிம்ஸ். இன்று தனுஷ் மாஸ்க்குடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ‘தனுஷ் 43’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு ஜூலையில் தொடங்குவதாக அறிவித்திருக்கிறது.

 

 

ALSO READ | Jagame Thandhiram: நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் கெத்துகாட்டும் ஜகமே தந்திரம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News