Thalapathy 68: விஜய்யுடன் 18 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்கும் பிக்பாஸ் நடிகர்?

Thalapathy 68 Update: விஜய்யின் தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் படத்தை வெளியிட திட்டம்.   

Written by - RK Spark | Last Updated : Dec 6, 2023, 08:29 AM IST
  • விறுவிறுப்பாக செல்லும் தளபதி 68.
  • அடுத்த ஆண்டு படத்தை வெளியிட திட்டம்.
  • வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடைபெறுகிறது.
Thalapathy 68: விஜய்யுடன் 18 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்கும் பிக்பாஸ் நடிகர்? title=

லியோ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு தளபதி விஜய் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் 'தளபதி 68' படத்தில் நடித்து வருகிறார்.  ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, துருக்கி ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு 2024 ஏப்ரல் மாதம் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது.  இந்நிலையில், தற்போது தளபதி 68 பற்றிய செய்தி ஒன்று வெளியாகி உள்ளது.  தளபதி விஜய்யுடன் 18 ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 கலந்து கொண்ட யுகேந்திரன் தளபதி 68 படத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. பாடகரும் நடிகருமான யுகேந்திரன் விஜய்யுடன் சில படங்களில் நடித்துள்ளார்.  2003ம் ஆண்டு வெளியான திருப்பாச்சி படத்தில் நடித்துள்ளார்.  

மேலும் படிக்க | விளம்பரம் தேடாதீங்க முதலமைச்சரே.... நடவடிக்கை எடுங்க - வானதி சீனிவாசன்

நாக சைதன்யாவை வைத்து தெலுங்கில் கஸ்டடி படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு விஜய்யை வைத்து இயக்குகிறார்.  தளபதி 68ல் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.  மேலும் இந்த படம் ஒரு அறிவியல் கதையை மையமாக கொண்டது என்றும் கூறப்படுகிறது.  தளபதி 68 படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, மோகன், ஜெயராம், அஜ்மல், யோகி பாபு, VTV கணேஷ், வைபவ், பிரேம்கி அமரன், அரவிந்த் ஆகாஷ் மற்றும் அஜய் ராஜ் ஆகியோர் நடிக்கின்றனர்.  பல ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.  தளபதி 68 படத்தின் முதல் சிங்கிள் ஷூட் சமீபத்தில் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது, இதில் பிரபுதேவா, தளபதி விஜய் மற்றும் பிரசாந்த் உள்ளிட்டோர் நடனமாடி உள்ளனர். மேலும் சமீபத்திய தகவல்களின்படி, படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு டிசம்பர் 31 அன்று வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.  

இப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக பிரபல நடிகை மீனாட்சி சவுத்ரி நடித்து வரும் நிலையில், மற்றொரு இளம் கதாநாயகி இப்படத்தில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் அவர் தளபதி விஜய்யின் தங்கையாக நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. நாச்சியார் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இவானா நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.  இருப்பினும் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான லவ் டுடே படத்தில் இவானா நடித்து இருப்பதால் இது உறுதியானதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.  

மேலும் படிக்க | Chennai Flood: விளம்பரம் தேடிய விஷால்.. பதம் பார்த்த நெட்டிசன்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News