விஜயின் தெறி திரைப்படமும், ரஜினியின் கபாலி திரைப்படமும் அமேசான் பிரைமில் இருந்து சிறிது நாட்களில் நீக்கபட உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. விஜய்யின் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் 2016ம் ஆண்டு வெளியான திரைப்படம் தெறி. போலீஸ் அதிகாரியாக விஜய் நடித்த இப்படம் தமிழ் புத்தாண்டிற்கு திரையரங்கில் வெளியாகி மிக பெரிய ஹிட் அடித்தது.
ALSO READ இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் 8 படங்கள்!
ரஜினியின் நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் உருவான திரைப்படம் கபாலி. இப்படமும் 2016ம் ஆண்டு மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. இந்த இரண்டு படங்களையும் கலைப்புலி தானு தயாரித்து இருந்தார். இந்த இரண்டு படங்களும் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தற்போது உள்ளது. இந்நிலையில் தெறி திரைப்படம் இன்னும் 4 நாட்கள், கபாலி திரைப்படம் இன்னும் 9 நாட்கள் மட்டுமே பிரேமில் இருக்கும் என்றும், அதன் பின் நீக்கப்படும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தெறி, கபாலி இரண்டு படங்களும் வெளியாகி 5 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இந்த இரண்டு படங்களின் ஓடிடி ஒளிபரப்பு உரிமை 5 ஆண்டுகளுக்கு மட்டுமே அமேசான் பிரைமிற்கு கொடுக்கப்பட்டு உள்ளது எனவும், அதனால் தற்போது அந்நிறுவனம் இப்படங்களை நீக்குகிறது என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இப்படங்கள் அமேசான் பிரேமில் இருந்து நீக்கப்பட்ட பின்பு நெட்ப்ளிக்ஸ் அல்லது சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது.
ALSO READ கோர்ட்ல நீதி கிடைக்கலைனா ரோட்ல எறங்கி போராடுவேன்! வெளியானது ஜெய் பீம் ட்ரைலர்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR