ரஜினி பாணியில் அஜித்? வெற்றி இயக்குனருடன் கைகோர்க்க உள்ளார்!

அஜித்குமார் மார்க் ஆண்டனி படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Oct 12, 2023, 07:26 AM IST
  • ஆதிக் இயக்கத்தில் நடிக்கும் அஜித்.
  • தற்போது விடாமுயற்சியில் நடித்து வருகிறார்.
  • துபாயில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
ரஜினி பாணியில் அஜித்? வெற்றி இயக்குனருடன் கைகோர்க்க உள்ளார்! title=

நடிகர் அஜித்குமார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தற்போது செய்தி வெளியாகி உள்ளது. இது குறித்து அதிகார்வப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், விடுதலை படத்தை தயாரித்த ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட்டின் கீழ் எல்ரெட் குமார் இப்படத்தை தயாரிக்கிறார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. விடுதலை படத்தின் முதல் பாகம் வெற்றியடைந்ததை தொடர்ந்து தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி அதன் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகின்றனர்.  அஜித் குமார் - ஆதிக் ரவிச்சந்திரன் காம்போ கோலிவுட்டில் ஒரு புதிய கூட்டணியாக இருக்கும் மற்றும் அஜித்திற்கு நிச்சயம் புதிய படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல்கள் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், மறுப்பு செய்தியும் வரவில்லை.

மேலும் படிக்க | விஜய்யா? ரஜினியா? தென்னிந்திய திரையுலகில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் யார்?

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் இந்த வருடத்தின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்றாக மாறி உள்ளது. இப்படம் திரையரங்குகளில் 3 வாரங்களை தாண்டி வெற்றிகரமாக ஓடியது.  வரும் அக்டோபர் 13ம் தேதி OTT தளங்களிலும் வெளியாக உள்ளது.  விஷால் -எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள மார்க் ஆண்டனி படத்தின் டிரெய்லர் வெளியானதில் இருந்தே, ஏராளமான எதிர்பார்ப்பு இருந்து வந்தது.  ட்ரைலரில் இருந்த சிலுக்கு கதாபாத்திரம், விண்டேஜ் பாடல்கள் பயன்பாடு மற்றும் டைம்மிஸின் காட்சிகள் என அனைத்தும் படத்தை வெற்றிகரமாக மாற்றியது.  

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனின் முந்தைய படங்களான த்ரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் மற்றும் பகீரா போன்ற படங்களை தாண்டி இந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்துள்ளது. ஆதிக் கே-13 மற்றும் பிங்க் ஹிந்தி படத்தின் தமிழ் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை போன்ற படங்களில் நடித்துள்ளார்.  பல இடங்களில் ஆதிக் தன்னை ஒரு அஜித் ரசிகராக முன்னிருத்தி உள்ளார்.  அவரது படங்களிலும் அஜித் ரெபரென்ஸ் வைக்க ஆதிக் தவறுவதில்லை.

அஜித் தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு அவரது அடுத்த படமான விடாமுயற்சியில் இணைந்துள்ளார்.  மகிழ் திருமேனியின் இயக்கத்தில் திரிஷா கிருஷ்ணன், சஞ்சய் தத், ஆரவ் மற்றும் ரெஜினா கசாண்ட்ரா ஆகியோர் இப்படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.  அக்டோபர் முதல் வாரத்தில் அஜர்பைஜானில் படப்பிடிப்பு தொடங்கியது. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த ‘என்னை அறிந்தால்’ படத்திற்குப் பிறகு அஜித் குமார் மற்றும் த்ரிஷா கிருஷ்ணன் கூட்டணியில் உருவாகும் படம் இது.  

அஜித் நடிப்பில் கடைசியாக துணிவு படம் இந்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியானது.  அதன் பிறகு அஜித் பைக் ட்ரிப் சென்றுவிட்டார்.  துணிவு படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க இருந்த அஜித், பிறகு அந்த படத்தில் இருந்து வெளியேறினார்.  கதை பிடிக்காததால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.  பிறகு இந்த படத்தில் மகிழ் திருமேனி உள்ளே வந்தார்.  லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க, அஜித்திற்கு இதுவரை இல்லாத வகையில் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | Bigg Boss Season 7: வைல்டு கார்டு என்ட்ரியில் இந்த விஜய் டிவி பிரபலம்? வெளியான வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News