கோலிவுட்டில் அறிமுகமாகி பாலிவுட்டுக்கு சென்று லேடி சூப்பர் ஸ்டாராக உயர்ந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் போனிகபூரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என்ற மகள்கள் இருக்கின்றனர். ஸ்ரீதேவி கடந்த 2018ஆம் ஆண்டு துபாயில் உயிரிழந்தார். இந்தச் சூழலில் ஜான்வி கபூரும் தற்போது பாலிவுட்டில் பல படங்களில் நடித்துவருகிறார். அவர் தற்போது குட்லக் ஜெர்ரி என்ற படத்தில் நடித்துவருகிறார்.
இந்தப் படமானது தமிழில் நெல்சன் திலீப்குமார் இயக்கி நயன்தாரா நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படமான கோலமாவு கோகிலா படத்தின் ஹிந்தி ரீமேக் ஆகும். சித்ய்தார்த் சென்குபதா இயக்கியிருக்கும் இப்படமானது ஜூலை 29ஆம் தேதி வெளியாகிறது.
படங்களில் நடிப்பது மட்டுமின்றி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பகிர்வதையும் அவர் வழக்கமாக வைத்திருக்கிறார். அப்படி அவர் வெளியிடும் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெறுபவை.
மேலும் படிக்க | ஏமாத்த ஒன்னும் இல்ல சேரி மக்கள்னா கெட்ட வார்த்தைதான் - பவி டீச்சரின் சர்ச்சை பேச்சு
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய ஜான்வி, “என் ஒவ்வொரு படத்தின் ஸ்க்ரிப்ட்டையும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு எடுத்துச் செல்கிறேன். அதன் மூலம் எனக்கு நல்லது நடக்கிறது என்று நம்பிக்கை.
என் அம்மா சினிமாவில் நடித்துக்கொண்டிருந்தபோது ஒவ்வொரு ஆண்டும் அவருடைய பிறந்தநாளுக்கு திருப்பதி கோயிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். ஆனால் திருமணம் முடிந்த பிறகு ஏனோ அதை நிறுத்திவிட்டார்.
மேலும் படிக்க | பொன்னியின் செல்வன் படத்திற்கு நோட்டீஸ்: வரலாற்று உண்மைகளை மறைத்தாரா இயக்குனர்
அம்மாவின் பிறந்தநாள் அன்று நான் திருப்பதி கோயிலுக்கு செல்ல வேண்டுமென்று எனது உள்மனது சொன்னது. இதையடுத்து ஆண்டுதோறும் அம்மாவின் பிறந்தநாளுக்கு திருப்பதிக்கு செல்கிறேன். மேலும் புத்தாண்டுக்கும் திருப்பதி கோவிலுக்குதான் செல்வேன்” என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ