52வது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழா இன்று முதல் கோவாவில் தொடக்கம்

சர்வதேச திரைப்பட விழா கோவாவில் இன்று தொடங்குகிறது

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 20, 2021, 11:09 AM IST
52வது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழா இன்று முதல் கோவாவில் தொடக்கம் title=

மும்பை: ஆசியாவின் பழமையான மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் சனிக்கிழமை தொடங்குகிறது. இன்று தொடங்கும் 8 நாள் திருவிழாவில் OTT தளங்களும் பங்கேற்கும். கோவாவில் நவம்பர் 28ஆம் தேதி வரை சர்வதேச திரைப்பட விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவில் ஹாலிவுட் திரைப்பட இயக்குநர்களான இஸ்த்வான் சாபோ மற்றும் மார்ட்டின் ஸ்கோர்செஸி ஆகியோருக்கு சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் (Satyajit Ray Life Time Achievement Award) விருது வழங்கப்படவுள்ளது. 

ஹேமா மாலினி (Hema Malini) மற்றும் பாடலாசிரியர் பிரசூன் (Prasoon Joshi) ஜோஷி ஆகியோருக்கும் இந்த ஆண்டின் சிறந்த இந்திய திரைப்பட ஆளுமை விருது (Indian Film Personality of the Year Award) வழங்கப்படும். முக்கியமாக, இந்த ஆண்டு சர்வதேச திரைப்பட விழா பொதுமக்களுக்கு திறக்கப்படும்.

ALSO READ | சீனாவில் திரையிடப்பட உள்ள “பரியேறும் பெருமாள்”

Netflix, Amazon Prime, Zee5, Voot மற்றும் Sony Live போன்ற முக்கிய OTT தளங்கள் அழைக்கப்பட்டுள்ளன. IFFI கடந்த 5 தசாப்தங்களாக உள்ளது. 52வது சர்வதேச திரைப்பட விழாவில் சத்யஜித் ரேயின் பல படங்கள் திரையிடப்படும். ஒவ்வொரு ஆண்டும் இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள சிறந்த திரைப்படங்கள் திரைப்பட விழாவில் திரையிடப்படுகின்றன.

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகமும் கோவா மாநில அரசும் இணைந்து நடத்தும் இந்தச் சர்வதேச திரைப்பட விழா வரும் நவம்பர் 20 முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திரையிடப்படவுள்ள படங்களின் பட்டியலில் தமிழ் சினிமாவில் இருந்து இவற்றுள் திரைப்படங்கள் பட்டியலில் வினோத் ராஜ் இயக்கிய `கூழாங்கல்’ திரைப்படம் இடம்பெற்றுள்ளது. குறும்படங்களின் பட்டியலில் ஜெயச்சந்திர ஹாஷ்மி இயக்கிய `ஸ்வீட் பிரியாணி’ இடம்பெற்றுள்ளது. 

அதன்படி இந்த இரு திரைப்படங்களுடன் தேர்வு செய்யப்பட்டுள்ள திரைப்படங்கள் கோவாவில் நடைபெறும் திரைப்பட விழாவில் பங்கேற்போருக்குத் திரையிடப்படும். வினோத் ராஜ் இயக்கிய `கூழாங்கல்’ திரைப்படம் இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா ஆகியோரின் ரௌடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.

அதேபோல் ஜெயச்சந்திர ஹாஷ்மி இயக்கியுள்ள `ஸ்வீட் பிரியாணி’ குறும்படம் சென்னை நகரத்தில் உணவு டெலிவரி செய்யும் தொழிலாளி ஒருவரின் ஒரு நாள் வாழ்க்கையைப் பற்றியும், அதில் நகரத்தில் அவர் எதிர்கொள்ளும் சாதியப் பிரச்னைகளைப் பற்றியும் பேசுகிறது. மேலும், இந்தக் குறும்படத்தில் பிராங்க் செய்து புகழ்பெற்ற ஆர்.ஜே சரித்திரன் டெலிவரி செய்யும் நபராக முன்னணி கதாபாத்திரம் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | ரசிகர்களுடன் மீண்டும் ‘கனெக்ட்’ஆகும் நயன்தாரா-விக்னேஷ்: வைரலாகும் ஃபர்ஸ்ட் லுக்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News