PM இன்டர்ன்ஷிப் திட்டம் 2025: ரூ.6000/மாதம் - பெறுவது எப்படி என தெரிந்து கொள்ளுங்கள்

PM Internship Scheme | பிரதமர் மோடி கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் மாதம் 6000 ரூபாய் பெறுவது எப்படி என தெரிந்து கொள்ளுங்கள்

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 29, 2024, 11:22 AM IST
  • பிரதமர் இன்டர்ஷிப் உதவித் தொகை
  • கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
  • ஜனவரி 2025 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
PM இன்டர்ன்ஷிப் திட்டம் 2025: ரூ.6000/மாதம் -  பெறுவது எப்படி என தெரிந்து கொள்ளுங்கள் title=

How To Apply PM Internship Scheme | மத்திய, மாநில அரசுகள் கல்லூரி மாணவர்களுக்கு பல உதவித் தொகை திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அதன்படி, PM இன்டர்ன்ஷிப் திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தி வருகிறது. 6000 ரூபாய் மாதம் கிடைக்கும். தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல்முறை, ஆன்லைனில் விண்ணப்பம் குறித்த முக்கிய தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள். இளங்கலை, முதுகலை படிப்பு முடித்த மாணவர்கள் இந்த உவித் தொகையை பயன்படுத்திக் கொள்ளலாம். அத்துடன் அரசு ஊழியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பும் இந்த திட்டத்தில் கிடைக்கும். 

PM இன்டர்ன்ஷிப் திட்டம் 2025:

இன்டர்ன்ஷிப் பெயர் - பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டம் (PMIS) 2025
இன்டர்ன்ஷிப் காலம் - 12 மாதங்கள்
உதவித்தொகை - மாதத்திற்கு ₹5,000
ஒரு முறை மானியம் - இன்டர்ன்ஷிப் உறுதி செய்யப்பட்ட பிறகு ₹6,000 வழங்கப்படும்
திட்டத்தின் குறிக்கோள் - இளைஞர்கள் அரசின் நிர்வாகத்தை அறிந்து கொள்ளலாம்
விண்ணப்பம் - ஜனவரி 2025 விண்ணப்பம் தொடங்கும்
அதிகாரப்பூர்வ இணையதளம் - https://pminternship.mca.gov.in/

மேலும் படிக்க | 2024ம் ஆண்டில் மத்திய அரசு தொடங்கிய... முத்தான சில மக்கள் நலத் திட்டங்கள்

PM இன்டர்ன்ஷிப் திட்டத் தகுதி 2025

PM இன்டர்ன்ஷிப் திட்டம் 2025 தகுதி பெற, விண்ணப்பதாரர்கள் இளங்கலை / முதுகலை / பிஎச்டி பட்டதாரியாக இருக்க வேண்டும். ஆராய்ச்சி மற்றும் எழுதுதல் மற்றும் பேச்சுத் திறன், சூழல்களை விளக்கும் திறன்களை கொண்டிருக்க வேண்டும். ஆங்கிலம் மற்றும் குறைந்தபட்சம் ஒரு பிராந்திய மொழி தெரிந்திருக்க வேண்டும். நிர்வாகம், பொது நிர்வாகம் மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளில் மிகுந்த ஆர்வம் காட்டியிருக்க வேண்டும்

PM இன்டர்ன்ஷிப் திட்ட வயது வரம்பு 2025

விண்ணப்பதாரர்கள் 18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். சிலருக்கு இந்த திட்டத்தில் விதிவிலக்கு உண்டு.

PM இன்டர்ன்ஷிப் திட்டம் 2025 தேர்வு செயல்முறை

ஆன்லைன் விண்ணப்பம், எழுத்துத் தேர்வு, நேர்காணல், இறுதி தேர்வு

PM இன்டர்ன்ஷிப் திட்டம் 2025க்கு எப்படி விண்ணப்பிப்பது?

PM இன்டர்ன்ஷிப் யோஜனா திட்டத்துக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அதிகாரப்பூர்வ தளத்துக்கு சென்று Login ID உருவாக்கி, விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஜனவரி 2025 தொடக்கத்தில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும். கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து இந்த திட்டத்தின் அறிவிப்பை கண்காணிக்க வேண்டும்.

மேலும் படிக்க | போஸ்ட் ஆபிஸ் பம்பர் திட்டம்! ரூ.5500 வீட்டில் உட்கார்ந்தபடியே மாதம் ஓய்வூதியம் பெறுங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News