உத்தரபிரதேசத்தின் சந்தௌலி மாவட்டத்தில் ஒரு வினோதமான நிகழ்வு நடந்துள்ளது. திருமண வரவேற்பு நிகழ்வில் பெண் வீட்டார் உணவை பரிமாற நீண்ட நேரம் எடுத்து கொண்டதால், கோபமடைந்த மணமகன் அந்த நிமிடமே தனது திருமணத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு, அன்று இரவே வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த டிசம்பர் 22ம் தேதி ஹமித்பூர் கிராமத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதற்காக மணமகன் மெஹ்தாப், மணமகள் இல்லத்திற்கு தனது உறவினர்களுடன் ஊர்வலமாக வந்துள்ளார்.
மணமகளின் குடும்பத்தினர் மணமகன் குடும்பத்தை அன்புடன் வரவேற்றனர். அப்போது உணவு பரிமாற்றத்தின் போது, மணமகன் குடும்பத்திற்கு போதிய உணவு கிடைக்கவில்லை என்று புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திருமண நிகழ்வில் பதற்றம் ஏற்பட்டது. தனது குடும்பத்திற்கு உணவு கிடைக்காததால் கோபமடைந்த மணமகன் திருமணத்தை உடனே நிறுத்தி அங்கிருந்து வெளியேறி உள்ளார். இந்த பிரச்சனை சரியாகும் என்று உறவினர்கள் நினைத்த நிலையில், அனைவருக்கும் அதிர்ச்சியூட்டும் வகையில், அன்று இரவே தனது உறவுக்கார பெண்ணை மெஹ்தாப் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இந்நிலையில், கைவிடப்பட்ட மணப்பெண்ணின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதில் மணமகன் மெஹ்தாபின் குடும்பத்தினர் ரூ.1.60 லட்சம் வரதட்சணையாக வாங்கியதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து, காவல்துறையினர் தலையிட்டு கடந்த 25ம் தேதி இரண்டு வீட்டாரிடமும் பேச்சு வார்த்தை நடத்தி உள்ளனர். பேச்சுவார்த்தைக்கு உடன்பட்ட மணமகன் குடும்பத்தினர் வரதட்சணையாக பெற்ற ரூ.1.60 லட்சத்தை திருப்பி அளித்துள்ளனர். பணம் திரும்ப கிடைத்ததை தொடர்ந்து மணமகளின் குடும்பத்தினர் புகாரை வாபஸ் பெற்றுள்ளனர். இருப்பினும் இந்த சம்பவம் அந்த பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க | மன்மோகன் சிங் நீல நிற டர்பன்... கடைசி வரை கலர் மாற்றாதது ஏன்? அவரே சொன்ன பதில்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ