புத்தாண்டு முதல் இனி இவர்களும் 1000 ரூபாய்... குஷியில் மாணவிகள்!

Pudhumaipenn Thittam Latest News Updates: புதுமைப்பெண் திட்டம் தற்போது விரிவுப்படுத்தப்பட உள்ள நிலையில், அதன் புதிய பயனாளர்கள் யார் யார் என்பதை இங்கு தெரிந்துகொள்ளலாம்.

Pudhumaipenn Thittam Expansion: அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 வகுப்பு வரை படித்து தற்போது உயர்க்கல்வி படிக்கும் மாணவியருக்கு மாதாமாதம் ரூ.1000 நேரடியாக வங்கிக் கணக்கில் தமிழ்நாடு அரசு சார்பில் (Tamil Nadu Government) செலுத்தப்படுகிறது.

1 /8

கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் மாணவியர்களுக்காக 'புதுமைப்பெண் திட்டம்' முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு (Tamil Nadu Government) வழங்கி வருகிறது.

2 /8

அரசு பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று தற்போது உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதாமாதம் அவர்களின் வங்கிக்கணக்கிற்கே ரூ.1000 ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது.

3 /8

இதேபோன்ற திட்டம் மாணவர்களுக்கும் கொண்டுவரப்பட்டது. தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் (Tamil Pudhalvan Thittam) கீழ் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவர்களுக்கும் மாதாந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது.

4 /8

தொடர்ந்து, புதுமைப்பெண் திட்டம் (Pudhumaipenn Thittam) தற்போது விரிவுப்படுத்தப்பட உள்ளது. அதாவது, கூடுதலாக 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் இத்திட்டம் மூலம் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், புதிதாக சேர்க்கப்பட உள்ள பயனாளிகள் யார் யார் என்பதை இங்கு காணலாம்.

5 /8

தற்போது அரசு பள்ளிகளில் படித்த மாணவியர்களுக்கு மட்டுமே இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. இனி அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவிகளுக்கும் ரூ.1000 வழங்கப்பட உள்ளது.

6 /8

விரிவாக்கம் செய்யப்பட்ட புதுமைப்பெண் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் (Tamil Nadu Chief Minister MK Stalin) நாளை மறுதினம் (டிச. 30) தூத்துக்குடியில் தொடங்க உள்ளார்.

7 /8

தமிழகம் முழுவதும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து தற்போது உயர்க்கல்வி பயிலும் 75,028 மாணவியருக்கு மாதம் 1,000 ரூபாய் நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

8 /8

இந்த திட்டத்தின் மூலம் மாணவியர் உயர்க்கல்வியில் சேரும் எண்ணிக்கை அதிகமாகி உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.