சிறுமிகளுக்கு எதிராக உபி-யில் தொடரும் பாலியல் கொடுமை!

உத்திர பிரதேச மாநிலம் மீராகான்ச் பகுதியில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!

Last Updated : Apr 14, 2018, 02:23 PM IST
சிறுமிகளுக்கு எதிராக உபி-யில் தொடரும் பாலியல் கொடுமை! title=

உத்திர பிரதேச மாநிலம் மீராகான்ச் பகுதியில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!

உத்திர பிரதேச மாநிலம் மீராகான்ச் காவல்நிலையம் அருகில், பள்ளியில் இருந்து வீட்டிற்கு திரும்பிய 11-வயது சிறுமி ஒருவரை அடையாளம் தெரியாத நபரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

கடந்த திங்கள் அன்று நிகழ்ந்த இச்சம்பவத்தில், பாதிக்கப்பட்ட சிறுமி சைக்கிலில் வீட்டிற்கு திரம்பியுள்ளார். அப்போது அவரை வழிமறித்த 20 வயது நபர் ஒருவர் அவரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து பாரேய்லி காவல்துறை அதிகாரி சதீஷ்குமார் தெரிவிக்கையில்... பாதிக்கப்பட்ட பெண் தன் பெற்றோரிடம் தெரிவித்தார். 

இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். பரிசோதனையில் அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

அதன் பின்னர் அவரது தந்தை காவல்துறையில் கொடுத்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபரை தேடிவருகின்றனர்.

Trending News