உங்கள் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தேவைப்படும் இந்த 3 பொருள்...

கல்லீரல் உடலின் பல செயல்பாடுகளை கட்டுப்படுத்துகிறது மற்றும் நச்சுக்களை நீக்குகிறது. கல்லீரல் மோசமாகிவிட்டால், ஹெபடைடிஸ், கொழுப்பு கல்லீரல், கல்லீரல் சிரோசிஸ், ஆல்கஹால் கல்லீரல் நோய், கல்லீரல் புற்றுநோய் போன்ற பல நோய்கள் தோன்றும் அபாயம் உள்ளது.

Last Updated : May 14, 2020, 10:28 PM IST
உங்கள் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தேவைப்படும் இந்த 3 பொருள்... title=

கல்லீரல் உடலின் பல செயல்பாடுகளை கட்டுப்படுத்துகிறது மற்றும் நச்சுக்களை நீக்குகிறது. கல்லீரல் மோசமாகிவிட்டால், ஹெபடைடிஸ், கொழுப்பு கல்லீரல், கல்லீரல் சிரோசிஸ், ஆல்கஹால் கல்லீரல் நோய், கல்லீரல் புற்றுநோய் போன்ற பல நோய்கள் தோன்றும் அபாயம் உள்ளது.

எனவே நாம் நம் கல்லீரலை எப்போதும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள விரும்புகிறோம். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க நீங்கள் சாப்பிட வேண்டிய உணவு பொருட்களை பற்றி நாம் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.

இஞ்சி - உங்கள் உணவு வழக்கத்தில் இஞ்சி டீயை சேர்த்தல் நல்லது. ஆம், இதைத் தவிர நீங்கள் காய்கறிகளிலோ பயறு வகைகளிலோ இஞ்சியை சேர்த்து சாப்பிடலாம். ஆய்வின்படி, இஞ்சியை 28 நாட்களுக்கு தொடர்ந்து உட்கொள்வது கல்லீரலை நச்சுத்தன்மை நீக்க செய்யும், மேலும் எடையையும் குறைக்கும். 

பூண்டு - இதில் ஃபிளாவனாய்டுகள் எனப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, அவை கல்லீரலின் நச்சுத்தன்மை நீக்கும். ஆய்வின் படி, கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க தினமும் 600-1200 மி.கி பூண்டு உட்கொள்ள வேண்டும். காய்கறிகளில் பயன்படுத்துவதைத் தவிர, நீங்கள் அதை பச்சையாகவும் சாப்பிடலாம். இதனுடன், பூண்டு மற்றும் தேன் நுகர்வு கல்லீரலின் ஆரோகியத்திற்கும், நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கும் உதவுகிறது.

மஞ்சள் - பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த மஞ்சள் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. நீங்கள் ஒவ்வொரு நாளும் 1.5-3 கிராம் மஞ்சளை உட்கொள்ள வேண்டும், நீங்கள் அதை உணவுடன் சேர்த்து பயன்படுத்தலாம். மறுபுறம், நீங்கள் அழற்சி குடல் நோய்க்குறியால் பாதிக்கப்படுகிறீர்கள் என்றால், 1-1.5 கிராம் மஞ்சளை தினம் எடுத்துக் கொள்ளுங்கள். கல்லீரலை சுத்தமாக்க மஞ்சள் மற்றும் கருப்பு மிளகு சாப்பிட நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

Trending News