LIC Jeevan Umang Policy: எல்ஐசி தனது வாடிக்கையாளர்கள் நலனை கருத்தில் கொண்டு அவ்வப்போது பாலிஸி திட்டங்களை கொண்டுவருகிறது, இதன் மூலம் உங்களின் மற்றும் உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தை பாதுகாக்க முடியும். இந்த வகையில், எல்ஐசிக்கு ஒரு சிறப்பு திட்டமான ஜீவன் உமாங் பாலிசி என்ற பாலிஸி திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதில் நீங்கள் முதலீடு செய்வதன் மூலம் நல்ல லாபம் பெறலாம். இந்த சூப்பார் பாலிஸி திட்டத்தை பற்றி முழுமையாக அறிந்து கொள்ளலாம்
எல்ஐசி ஜீவன் உமாங் பாலிஸி ஒரு எண்டோமென்ட் பாலிஸி திட்டம்
ஜீவன் உமாங் பாலிஸி பல விஷயங்களில் மற்ற திட்டங்களிலிருந்து வேறுபட்டது. 90 நாட்கள் முதல் 55 வயது வரை உள்ளவர்கள் இந்த பாலிசியை எடுக்கலாம். இது ஒரு எண்டோமெண்ட் பாலிஸி திட்டம். இதில், ஆயுள் காப்பீட்டுடன், முதிர்ச்சியடைந்தவுடன் ஒரு மொத்தமாக தொகையும் கிடைக்கும். முதிர்வுக்குப் பிறகு ஒவ்வொரு வருடமும் நிலையான வருமானம் உங்கள் கணக்கில் வரும். மறுபுறம், பாலிசிதாரரின் மரணத்திற்குப் பிறகு, அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நாமினேட் செய்யப்பட்டவர் மொத்தத் தொகையைப் பெறுவார்கள். இந்த திட்டத்தின் மற்றொரு அம்சம் என்னவென்றால், இது 100 ஆண்டுகள் வரை பாதுகாப்பு அளிக்கிறது.
ALSO READ | பென்ஷன் இல்லை என்ற டென்ஷன் வேண்டாம்! ரூ.50,000 ஓய்வூதியம் தரும் அசத்தல் திட்டம்..!!
ரூ.27.60 லட்சம் கிடைக்கும்
இந்த பாலிசியில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ .1302 பிரீமியம் செலுத்தும் போது, ஒரு வருடத்தில் இந்த பீரியம் தொகை ரூ.15,298 என்ற அளவில் இருக்கு. இந்த பாலிசி திட்டத்தில் 30 வருடங்களுக்கு ப்ரீமியம் செலுத்தினால், அந்த தொகை சுமார் 4.58 லட்சமாக அதிகரிக்கும். உங்கள் முதலீட்டின் மீது 31 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் 40 ஆயிரம் வருமானத்தை நிறுவனம் கொடுக்கத் தொடங்குகிறது. நீங்கள் 31 வருடங்கள் முதல் 100 வருடங்கள் வரை ஆண்டுதோறும் 40 ஆயிரம் வருமானத்தை பெற்றுக் கொள்ளும் போது, உங்களுக்கு சுமார் ரூ.27.60 லட்சம் தொகை கிடைக்கும்.
பாலிசிதாரர் இறந்தால் கிடைக்கும் காப்பீடு
இந்த பாலிசியின் கீழ், பாலிஸிதாரர் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது இடல் ஊனமுற்றாலோ, காப்பீட்டு தொகை வழங்கப்படும். இந்த பாலிசியை எடுக்கும் போது வருமான வரியின் 80C பிரிவின் கீழ் வரி விலக்கு கிடைக்கிறது. ஜீவன் உமாங் பாலிசி திட்டத்தில் சேர விரும்பினால், குறைந்தபட்சம் இரண்டு லட்சம் ரூபாய் காப்பீடு எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | அதிர்ச்சித் தகவல்! ரயில் பயணிகளுக்கு 'இந்த’ சேவை கிடைக்காது; காரணம் என்ன..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR