8th Pay Commission எப்போது? மத்திய அரசுக்கு மகஜர் கொடுக்கும் ஊழியர் சங்கங்கள்

8th Pay Commission:ஏழாவது ஊதிய கமிஷனின் பரிந்துரைகளை சரியாக அமல்படுத்தவில்லை என்று கூறும் ஊழியர் சங்கங்கள், எட்டாவது ஊதிய கமிஷன் மற்றும் சம்பள உயர்வு தொடர்பாக மத்திய அரசுக்கு மகஜர் கொடுக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 19, 2022, 09:07 AM IST
  • ஏழாவது ஊதிய கமிஷனின் பரிந்துரைகளை சரியாக அமல்படுத்தவில்லை
  • ஊழியர் சங்கங்கள் வருத்தம்
  • 8வது ஊதிய கமிஷன் தொடர்பாக மத்திய அரசுக்கு மகஜர் கொடுக்கப்படும்
8th Pay Commission எப்போது? மத்திய அரசுக்கு மகஜர் கொடுக்கும் ஊழியர் சங்கங்கள் title=

8th Pay Commission Latest Updates: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மீண்டும் ஒரு நல்ல செய்தி கிடைக்கும் என்று தோன்றுகிறது. 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளுக்கு அப்பாற்பட்டு, தங்களுக்கு சம்பளம் குறைவாக இருப்பதாக வருந்தும் மத்திய ஊழியர்களின் கவலைகள் தீரும் என்ற நிலை வந்துள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் பணிஓய்வு பெற்றவர்களின் சம்பள உயர்வு கோரிக்கை குறித்து விரைவில் பெரிய முடிவு எடுக்கப்படும். தங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டதை விட குறைவான சம்பளம் கிடைப்பதாக புகார் கூறும் ஊழியர்கள், இது தொடர்பாக மகஜர் ஒன்றை தயாரித்து வருவதாகவும், அது விரைவில் அரசிடம் சமர்ப்பிக்கவுருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த மகஜர் தொடர்பாக தகவல் தெரிவித்துள்ள ஊழியர் சங்கங்கள், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்பட வேண்டும் அல்லது 8வது ஊதியக்குழுவை கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுக்கக்கின்றன. 

குறைந்தபட்ச சம்பளம் 26 ஆயிரம் ரூபாய் 

தற்போது குறைந்தபட்ச ஊதிய வரம்பு ரூ.18 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய பணியாளர் அமைப்புகள் கூறுவதாக தகவல்கள் கூறுகின்றன. இதில், அதிகரிப்பில் உள்ள பொருத்து காரணிக்கு (fitment factor) அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. 7வது ஊதியக் குழுவில், இது 3.68 மடங்கு வரை வைத்திருக்க பரிந்துரைக்கப்பட்டிருந்தாலும், தற்போது இந்த காரணி 2.57 என்ற அளவில்தான் உள்ளது.

உண்மையில் இது பரிந்துரையின்படி அமல்படுத்தப்பட்டால், ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.26 ஆயிரமாக உயரும்.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஜூலை 1 முதல் 39% டிஏ, பம்பர் ஊதிய ஏற்றம், முழு கணக்கீடு இதோ 

அரசாங்கம் ஒரு புதிய அமைப்பையும் தொடங்குமா?

தற்போது 7வது ஊதியக்குழுவுக்கு பிறகு புதிய ஊதியக்குழு வருமா என்பது சந்தேகமாக இருக்கிறது. ஏனென்றால், அரசு ஊழியர்களின் சம்பளத்தை தானாக உயர்த்தும் முறையை அரசு அமல்படுத்தப் போவதாக கூறப்படுகிறது. இது 'தானியங்கு ஊதிய திருத்த முறை'யாக (automatic pay revision system) இருக்கலாம்,

இதில் டிஏ 50 சதவீதத்திற்கு மேல் இருந்தால், சம்பளத்தில் தானாக திருத்தம் செய்யப்படும். இது நடந்தால், 68 லட்சம் மத்திய அரசு பணியாளர்கள் மற்றும் 52 லட்சம் ஓய்வூதியதாரர்களும் நேரடி பலன்கள் கிடைக்கும். ஆனால், இது குறித்து அரசு இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை.  

மேலும் படிக்க | ஊழியர்களுக்கு பம்பர் ஊதிய உயர்வு, இந்த காரணியில் உயர்வு சாத்தியம்

குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு சம்பளம் அதிகரிக்கலாம்

இந்த விவகாரம் தொடர்பாக நிதி அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், பணவீக்கத்தை கருத்தில் கொண்டு நடுத்தர ஊழியர்களின் சம்பளமானது, கீழ் மட்டத்தில் இருந்து உயர்த்த வேண்டும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், 2023-ம் ஆண்டு புதிய சம்பளக் கொள்கையை அரசு கொண்டு வந்தால், நடுத்தர நிலை ஊழியர்களுக்கு அதிகப் பலன் கிடைக்காமல் போகலாம்.

ஆனால், குறைந்த வருமானம் பெறும் ஊழியர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். அவர்களின் அடிப்படை ஊதியம் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.21 ஆயிரம் வரை அதிகரிக்கலாம்.

மத்திய அரசுக்கு மகஜர் 

சம்பள உயர்வு கோரிக்கைகள் தொடர்பாக விரைவில் மகஜர் தயாரித்து அரசிடம் ஒப்படைக்க உள்ளதாகவும், கோரிக்கைகளை ஏற்க அரசு மறுத்தால், தொழிற்சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்படும். இந்த போராட்டங்களில்ல், மத்திய அரசு ஊழியர்களுடன், ஓய்வூதியதாரர்களும் பங்கேற்பார்கள் என்று மத்திய ஊழியர் சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களின் டிஏ அரியர் குறித்த முக்கிய அப்டேட் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News