ஸ்லோகங்களுக்கும், வேத மந்திரங்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன?

மொழியறிவு பெற்றவர்கள் இலக்கியப் பிழை இன்றி இறைவனைப் பற்றி எழுதிய துதிகள் ஸ்லோகங்கள் என்று அழைக்கப்படுகின்றன..!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 24, 2021, 06:03 AM IST
ஸ்லோகங்களுக்கும், வேத மந்திரங்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன? title=

மொழியறிவு பெற்றவர்கள் இலக்கியப் பிழை இன்றி இறைவனைப் பற்றி எழுதிய துதிகள் ஸ்லோகங்கள் என்று அழைக்கப்படுகின்றன..!

ஸ்லோகங்கள், இறைவனைக் குறித்த வழிபாட்டு துதிகள். இறைவனைப் போற்றி பாராட்டுகின்ற வகையில் இலக்கியவாதிகளால் இயற்றப்பட்டவை. மொழியறிவு பெற்றவர்கள் இலக்கியப் பிழை இன்றி இறைவனைப் பற்றி எழுதிய துதிகள் ஸ்லோகங்கள் (slogans) என்று அழைக்கப்படுகின்றன. இவை எந்த மொழியில் வேண்டுமானாலும் இருக்கலாம். தமிழ், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம் என அவரவர் புலமை பெற்ற மொழியில் ஸ்லோகங்களை இயற்றி உள்ளனர். அவ்வளவு ஏன், ஆங்கில மொழியில் புலமை பெற்ற ஒருவர், இறைவனைப் போற்றி ஒரு துதியை எழுதினால் அதனையும் ஸ்லோகமாக ஏற்றுக் கொள்ள இயலும். ஆனால், வேதமந்திரங்கள் (Vedic mantras), இறைவனைப் பற்றி மட்டும் சொல்வது அன்று. இந்த பிரபஞ்சத்தினுடைய ரகசியத்தினை உள்ளடக்கியது.

ALSO READ | ஓம் நமச்சிவாய அல்லது சிவாயநம நாமத்தை எப்படி கூறலாம்.!

நாம் இன்று புதிதாகக் கண்டு வரும் அத்தனை அறிவியல் அற்புதங்களையும் தன்னுள்ளே அடக்கி வைத்திருப்பவை வேத மந்திரங்கள். நம் நாட்டில் வாழ்ந்த விஞ்ஞானிகளான மகரிஷிகள் (Maharishis) தங்கள் தவ வலிமையால் ஆராய்ந்து அவற்றை தேவலிபியான சமஸ்கிருத மொழியில் தொகுத்துத் தந்திருப்பதே வேத மந்திரங்கள். இவ்வுலகம் மட்டுமின்றி ஈரேழு பதினான்கு லோகத்தினைப் பற்றிய குறிப்புகள் அனைத்தையும் உள்ளடக்கியதே வேத மந்திரங்கள். வேதம் முழுவதையும் கற்றறிந்தவர் இவ்வுலகில் எவரும் இல்லை. அண்டம் முதல் பிண்டம்வரை அத்தனை சூட்சுமங்களையும் தனக்குள் கொண்டிருப்பது வேதம். வேத மந்திரங்கள் என்பது அறிவியல் ரீதியான பொக்கிஷம் என்றால் அது மிகையில்லை.

உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்... 

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News