எண் ஜோதிடம்: இந்த “3” எண்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றி தான்..!!

ஜோதிட சாஸ்திரத்தில் ராசிகள் மூலம் ஜாதகம் சொல்லப்படுவதைப் போல எண் கணிதத்திலும் (Numerology), ஒருவரின் எதிர்காலத்தை அவர் பிறந்த தேதி மூலம் தெரிந்து கொள்ளலாம். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 22, 2021, 12:00 PM IST
எண் ஜோதிடம்: இந்த “3” எண்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றி தான்..!!  title=

புதுடெல்லி: ஜோதிட சாஸ்திரத்தில் ராசிகள் மூலம் ஜாதகம் சொல்லப்படுவதைப் போல எண் கணிதத்திலும் (Numerology), ஒருவரின் எதிர்காலத்தை அவர் பிறந்த தேதி மூலம் தெரிந்து கொள்ளலாம். ஒரு நபரின் பிறந்த தேதியின் கூட்டுத்தொகையை வைத்து அவருக்கான பலன்களை கணிக்கலாம்.

உதாரணமாக, ஒருவர் ஏதேனும் ஒரு மாதத்தின் 15 ஆம் தேதி பிறந்திருந்தால், 1 மற்றும் 5 ஐக் கூட்டினால் அந்த நபரின் பிறந்த தேதியின் கூட்டுத் தொகை 6 ஆக இருக்கும்.  பிறந்த தேதியை  கூட்டி கிடைக்கும்  ஒற்றை எண், அதாவது கூட்டுத் தொகை பிறந்த எண் ஆகும்.  உதாரணத்திற்கு 1,10,19, 28 என்றால் அவர்களின் பிறந்த எண் 1 ஆகும்

பிறந்த எண்  1 - இந்த வாரம்  பிறந்த எண் 1-ன் சொந்தக்காரர்களுக்கு மிகவும் நிம்மதியான வாரமாக இருக்கும். அவர்கள் ஒரு பயணம் செல்ல வேண்டும் என்றாலும். செலவுகள் அதிகரிக்கும் ஆனால் வேலைகள் ஒவ்வொன்றாக முடிவடையும். குடும்பத்தில் பதற்றம் ஏற்படலாம், பேசுவதில் கவனமாக இருக்கவும். வீடு, மனை வாங்கும் திசையில் நல்லது நடக்கும்.

பிறந்த எண் 2  -  பிறந்த எண் 2  உள்ளவர்கள் இந்த வாரத்தில் வியாபாரத்தில் லாபம் பெறலாம். குறிப்பாக கூட்டுப் பணிகளில் வெற்றி உண்டாகும். பதற்றம் இருக்கலாம் ஆனால் பிரச்சனைக்கான காரணமும் விரைவில் தீர்க்கப்படும். பணியிடத்தில் பாராட்டப்படுவார்கள். பணம் வரவு இருக்கும்.

ALSO READ:Weekly Horoscope: இந்த 2 ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பணம் கிடைக்கும் 

பிறந்த எண் 3 - நீண்ட நாட்களாக பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்த  பிறந்த எண் 3-ன் சொந்தக்காரர்களுக்கு இந்த வாரம் நிவாரணம் கிடைக்கும். தடைபட்ட பழைய வேலைகள் நடக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். பயணங்களால் நன்மை உண்டாகும். பொறுப்புகள் அதிகரிக்கலாம்.

பிறந்த எண் 4- பிறந்த எண்  4-ன் சொந்தக்காரர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். பல பிரச்சனைகள் எளிதில் தீரும். ஆரோக்கியமும் சீராக இருக்கும். சில அதிசய நிகழ்வுகள் உங்களை ஆச்சரியப்படுத்தலாம்.

பிறந்த எண்  5  - பிறந்த எண்  5 இன் சொந்தக்காரர்கள் இந்த வாரம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், அவசரப்பட வேண்டாம். வாக்குவாதங்களைத் தவிர்க்கவும், இல்லையெனில் உங்கள் அன்புக்குரியவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். பணத்தால் நன்மை உண்டாகும். திருமணமாகாதவர்களின் உறவு மேம்படும் வாய்ப்பும் உள்ளது

பிறந்த எண்  6 - பிறந்த எண்  6 என  கொண்டவர்களுக்கு இந்த வாரம் பண வரவினால் நன்மை அடைவார்கள். இது அவர்களின் நிதி நிலையை பலப்படுத்தும். ஆன்மீக பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உள்ளது.  அது மிகுந்த நிம்மதியையும் அமைதியையும் கொடுக்கும். தடைபட்ட வேலைகள் நிறைவடையும். அவசரத்தைத் தவிர்க்கவும்.

ALSO READ:Weekly Horoscope: இந்த 2 ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பணம் கிடைக்கும் 

பிறந்த எண்  7 - பிறந்த எண்  7 ன் சொந்தக்காரர்கள் இந்த வாரம் நிலம் அல்லது சொத்து மூலம் லாபம் ஈட்டலாம். புதிய வருமான வழிகள் உருவாகும். உங்கள் அன்புக்குரியவர்களுடன் சண்டையிடுவதைத் தவிர்க்கவும், இல்லையெனில் இழப்பு ஏற்படலாம். தனியாக இருப்பவர்களுக்கு துணை கிடைக்கலாம். வியாபாரம் நன்றாக நடக்கும்.

பிறந்த எண்  8 - பிறந்த எண் 8-ன் சொந்தக்காரர்கள் இந்த வாரம் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பார்கள். காரியம் எளிதாக நடக்கும். வியாபாரத்தில் பெரிய வெற்றியை அடைய முடியும். நல்ல செய்தி கிடைக்க வாய்ப்பு உண்டு. குடும்பப் பயணம் மேற்கொள்ளு வாய்ப்பு உள்ளது. 

ALSO READ:இந்த 3 ராசிக்காரர்கள் மிகவும் உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள் 

பிறந்த எண்  9  - பிறந்த எண்  9 இன் சொந்தக்காரர்கள் பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்க வேண்டும். எதிர்மறை தாக்கம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் கவனமாக இருக்க வேண்டும். செலவுகள் கூடும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். பதவி உயர்வு பெறலாம். மரியாதை கிடைக்கும்

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News