Thalapathy 69 Movie Title : விஜய் நடிக்கும் அவரது கடைசி படமான ‘தளபதி 69’ படத்தின் வேலைகள் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. இந்த நிலையில், இப்படத்தின் தலைப்பு குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Thalapathy 69 Movie Title : சினிமாவிற்கு இந்த ஆண்டே குட்-பை சொல்ல இருக்கும் நடிகர் விஜய், தனது கடைசி படமான ‘தளபதி 69’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை, ஹெச்.வினோத் இயக்க, அனிருத் இசையமைக்கிறார். விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி டியோல், மமிதா பைஜு, நரேன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படம், பகவந்த் கேசரி படத்தின் ரீ-மேக் என கூறப்படுகிறது. இந்த நிலையில், இப்படத்தின் டைட்டில் என்னவாக இருக்கும் என்பது குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியிருக்கும் நடிகர் விஜய், விரைவில் சினிமாவிற்கு முழுக்கு போட இருக்கிறார். அவர் கடைசியாக நடித்து வரும் படம்தான், ‘தளபதி 69’. இந்த படத்தின் டைட்டில் குறித்த தகவல்தான் இப்போது வெளியாகி இருக்கிறது.
விஜய் நடிப்பில் கடந்தாண்டு வெளியான தி கோட் திரைப்படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதை அடுத்து, அவர் உடனடியாக ஹெச்.வினோத்துடன் கைக்கோர்த்தார்.
தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இவர் பீஸ்ட் படத்திற்கு பிறகு விஜய்யுடன் இந்த படத்தில் ஜோடி சேருகிறார். கூடவே வில்லனாக பாபி டியோல் நடிக்கிறார். இப்படத்தின் பூஜை சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் நடந்தது.
தளபதி 69 படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. காரணம், இது விஜய்யின் அரசியல் கட்சி அறிவிப்புக்கு பிறகு எடுக்கப்பட்டிருக்கும் படம் என்பதால், இதிலும் விஜய் நிறைய அரசியல் பேசியிருப்பார் என சொல்லப்படுகிறது.
தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற, பகவந்த் கேசரி படத்தின் சில காட்சிகளுக்கான உரிமையை தளபதி 69 படக்குழு வாங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால், இந்த படம், அதன் ரீ-மேக் ஆக இருக்குமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
விஜய்யின் தளபதி 69 படத்தின் பெயர், ‘நாளைய தீர்ப்பு’ என சொல்லப்படுகிறது. இதற்காக ரசிகர்கள் உருவாக்கியிருக்கும் போஸ்டர்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தையொட்டி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் இன்னொரு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், விஜய் ஹீரோவாக அறிமுகமானது 1992ஆம் ஆண்டு வெளியான நாளைய தீர்ப்பு படம் மூலமாகத்தான். இந்த படத்தில் நடிக்கும் போது அவருக்கு 18 வயது. தற்போது தளபதி 69 படத்திற்கும் அதே பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், ரசிகர்கள் சிலர் “எங்கு தொடங்கியதோ அங்கேயே முடிகிறது” என கமெண்ட் செய்து வருகின்றனர். ஒரு சிலர் இது விஜய்க்கு ராசியான பெயர் என்றும் கூறி வருகின்றனர்.