Weekly Horoscope: வரும் வாரம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை தான்..!!

டிசம்பர் மாதத்திற்கான இந்த வார ராசிபலனில், சில ராசிக்காரர்களுக்கு வரும் வாரம் சிறப்பாக இருக்கும் என கூறப்படுட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 12, 2021, 06:34 PM IST
  • அரசுத் துறையில் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள்.
  • மறக்க முடியாத பயணங்களையும் மேற்கொள்ளலாம்.
  • குழந்தைகளின் கல்விக்காக அதிக பணம் செலவிட நேரிடும்.
Weekly Horoscope: வரும் வாரம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை தான்..!! title=

புதுடெல்லி:  வரும் வாரம் சில ராசிக்காரர்களுக்கு மிக அற்புதமாக இருக்கும். சிலரின் நிறைவேறதா ஆசை நிறைவேறப் போகிறது.

மேஷம்: இந்த வாரம் உங்களின் கடின உழைப்பின் பலன் கிடைத்து, அதிர்ஷ்டமும் எல்லா வகையிலும் சிறப்பாகப் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். தொலைதூரப் பயணங்கள் சாத்தியமாகும். எனினும், நீங்கள் மற்றவர்களுக்கு உதவுவீர்கள் ஆனால் யாரும் உங்களுக்கு உதவ முன்வர மாட்டார்கள்.

ரிஷபம்: இந்த வாரம் உங்கள் ஆன்மீக நம்பிக்கை அதிகரிக்க கூடும். பணம் தொடர்பான விஷயங்களில், சுப பலன்கள் இருக்கும். இந்த வாரம், நீண்ட நாட்களுக்குப் பிறகு அறிமுகமானவரை சந்திக்கும் வாய்ப்பும் கிடைக்குக்கும். உயர் பதவியில் இருப்பவர்களுடன் நல்ல நேரம் கழியும்.

மிதுனம்: இந்த வாரம் குடும்பத்தில் உள்ளவர்களுடன் சேர்ந்து செய்யும் எந்த வேலையிலும் வெற்றி கிடைக்கும். பணம் தேவைப்படலாம், எனவே கடன் வாங்கும் எண்ணம் ஏற்படலாம். திருமண வாழ்வில் கருத்து வேறுபாடுகள் காணப்படும். இந்த வாரம் குழந்தைகளால் நல்ல செய்திகள் வந்து சேரும்.

ALSO READ | 2022-ம் ஆண்டில் ராகு-கேதுவால் இந்த ராசிக்கு கேடு ஏற்பட வாய்ப்பு 

கடகம்: குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும், குடும்ப உறுப்பினர்களின் ஆதரவும், அனுசரணையும் உங்களுக்குக் கிடைக்கும். அரசுத் துறையில் லாபகரமான முடிவுகள் கிடைக்கும். உங்கள் பிள்ளைகள் உங்கள் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவார்கள். சமூகத்தில் உங்கள் மதிப்பு உயரும். இந்த வாரம் உங்களுக்கு திடீர் பண ஆதாயம் கிடைக்கும்.

சிம்மம்: இந்த வாரம் உங்கள் எதிரிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. குடும்பச் சொத்து, செல்வம் ஆகியவற்றில் சில சிரமங்கள் ஏற்படலாம். நீங்கள் சமூகத்தில் மரியாதை மற்றும் கவுரவத்தை பெறுவீர்கள். வேலைத் துறையில் உங்கள் செல்வாக்கு நன்றாக இருக்கும். இந்த வாரம் உங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.

கன்னி: இந்த வாரம் கடவுள் நம்பிக்கை அதிகரிக்கும். நீங்கள் நன்மை செய்யும் இயல்புடையவராக இருப்பீர்கள், இது உங்களுக்கு மன அமைதியை தரும். திருமண வாழ்வில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பணிபுரியும் துறையில் நல்ல செய்தி கிடைக்கும். இந்த வாரத்தின் பெரும்பகுதி பயணங்களிலேயே செலவிடப்படும்.

துலாம்: சமயப் பணிகளுக்கு இந்த வாரம் மிகவும் நல்லது. பயண வாய்ப்புகளும் அமையும். குடும்பத்தில் மங்களகரமான வேலைகள் நடக்கும். உங்களின் புத்திசாலித்தனத்தால் பணியில் வெற்றி பெறுவீர்கள். திருமண வாழ்வில் இனிமை காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும்.

ALSO READ | சனி பெயர்ச்சி; அதிக அதிர்ஷ்டத்தைப் பெற உள்ள ராசிகள் எவை 

விருச்சிகம்: இந்த வாரம் இல்லற வாழ்வில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பெரியவர்களின் ஆசிகள் உங்களுக்கு நன்றாக இருக்கும். உங்கள் வீட்டிலோ அல்லது உறவினர்களிலோ ஒருவித சுப காரியங்கள் ஏற்பாடு செய்யப்படலாம், இதனால் மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.

தனுசு: இந்த வாரம் திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும், மனைவி மற்றும் குழந்தைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்கள் பேச்சின் தாக்கம் மற்றவர்களுக்கு ஊக்கம் கொடுப்பதாக இருக்கும். உங்கள் கௌரவம் உயரும். இந்த வாரம் உங்கள் முயற்சி மற்றும் புத்திசாலித்தனத்தினால், வேலையில் வெற்றி பெறுவீர்கள்.

மகரம்: இந்த வாரம் வியாபாரத் துறையில் லாபகரமான சூழ்நிலை இருக்கும். உங்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். நல்ல அதிர்ஷ்டம் இருக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும், வாழ்க்கைத்துணையுடன் நல்ல நேரம் இருக்கும்.

கும்பம்: இந்த வாரம் உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். உங்கள் இயல்பு மற்றும் நடத்தையில் முதிர்ச்சி காணப்படும். உங்கள் பேச்சில் இனிமை இருக்கும், இதன் காரணமாக மற்றவர்களை உங்கள் பக்கம் ஈர்க்க முடியும்.

மீனம்: இந்த வாரம் அரசுத் துறையில் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். சமய நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். குழந்தைகளின் கல்விக்காக அதிக பணம் செலவிட நேரிடும். குழந்தைகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். திருமண வாழ்க்கையில் இனிமை இருக்கும். உயர் பதவியில் இருப்பவர்களுடன் இந்த வாரம் நல்லுறவு உருவாகும்.

ALSO READ | இந்த 2 ராசிக்காரர்கள் இன்று எதிலும் கவனம்; நிதானமாக செயல்பட வேண்டும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News