படுக்கைக்கு முன் சூடான பால் குடிங்க... உடல் ரிலாக்ஸ் ஆகும்... மேலும் இந்த 4 நன்மைகளும் கிடைக்கும்!

Health Tips In Tamil: இரவில் தூங்குவதற்கு முன்னர் சூடான பாலை அருந்தினால் கிடைக்கும் நான்கு ஆரோக்கிய நன்மைகளை இங்கு விரிவாக காணலாம்.

இரவில் நல்ல உணவுப் பழக்கவழக்கத்தை கடைபிடிப்பது நல்லது. அதுவும் தூங்குவதற்கு 2-3 மணிநேரத்திற்கு முன்னரே சாப்பிடுவது நல்லது. அதே நேரத்தில் குறிப்பிட்ட உணவுகளை இரவில் சாப்பிடுவதன் மூலமும், தவிர்ப்பதன் மூலம் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் நீங்கள் பேணிக் காக்கலாம். 

 

 

1 /8

இரவில் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியமாகும். உடல் ரீதியாகவும் சரி, மனரீதியாகவும் சரி ஆரோக்கியமாக இருக்க இரவில் நல்ல உணவுகளை எடுப்பது அவசியமாகும்.   

2 /8

அந்த வகையில், நீங்கள் இரவில் சூடான பாலை தினமும் அருந்துவது உடல்நலனுக்கு நல்லதாகும். பாலில் கால்சியம், புரதச்சத்து, வைட்டமின்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் நிறைந்திருக்கின்றன.  

3 /8

இது உடல்நலனுக்கு நல்லது மட்டுமின்றி உங்களின் சிறந்த தூக்கத்திற்கும் உதவிசெய்யும். தூக்கம் சிறப்பாக இருந்தால் மனநலமும், உடல்நலமும் ஒருங்கே ஆரோக்கியமாக இருக்கும். அந்த வகையில், இரவில் சூடான பாலை அருந்தினால் கிடைக்கும் நான்கு ஆரோக்கிய நன்மைகளை இங்கு காணலாம்.   

4 /8

எலும்புகள், பற்களுக்கு நல்லது: பாலில் உள்ள கால்சியம் எலும்பு வலுபெற உதவும். மேலும், அதில் உள்ள பாஸ்பரஸ், மேக்னீஸியம் போன்றவை கால்சியத்தை உடல் உறிஞ்சுவதற்கு உதவி, ஒட்டுமொத்த எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு நல்லதாகும்.   

5 /8

சரும ஆரோக்கியம்: சூடான பாலை இரவில் குடிப்பதால் சருமத்திற்கும் நல்லதாகும். இதில் உள்ள வைட்டமிண் A, D, E உள்ளிட்டவை உங்களின் ஆரோக்கியமான சருமத்திற்கும் மற்றும் இளமையான தோற்றத்திற்கும் அவசியமாகும். வைட்டமிண் ஏ சருமத்தில் உள்ள செல்கள் மறுஉருவாக்கத்திற்கு முக்கிய பங்காற்றும். இதனால் சேதமடைந்த செல்கள் மீண்டும் உருபெறும், இதன்மூலம் சருமத்தில் சுருக்கங்கள் இருக்காது.   

6 /8

செரிமானத்திற்கு நல்லது: பாலில் உள்ள லாக்டிக் அமிலம் உங்கள் குடலில் உள்ள pH அளவை சமச்சீராக வைத்திருந்து, ஆரோக்கியமான செரிமானத்திற்கு வழிவகுக்கும். Casein என்ற புரதச்சத்து பாலில் இருப்பதால் செரிமானத்தை சீர்செய்து, ஊட்டச்சத்து உடனடியாக உடலில் சேர்வதற்கு உதவும். குடலில் இருக்கும் நுண்ணுயிர்களும் இதனால் சீராக இருக்கும்.   

7 /8

நன்றாக தூக்கம் வரும்: சூடான பாலை தினமும் இரவில் குடித்தால் உடலின் tryptopan அளவை அதிகமாக்கும். இது உங்களை ரிலாக்ஸாக வைத்திருக்க உதவும். தூக்கமும் நன்றாக வரும்.   

8 /8

பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்கள் மற்றும் வீட்டு வைத்தியங்கள் சார்ந்து எழுதப்பட்டவையாகும். இதனை பின்பற்றும் முன் நீங்கள் மருத்துவ நிபுணரிடம் ஆலோசனை பெற வேண்டும். இதனை Zee News உறுதிசெய்யவில்லை.