வாஸ்து சாஸ்திரம்: வீட்டின் மீது ‘இவற்றின்’ நிழல் பட்டால் முன்னேற்றம் தடை படும்!

வாஸ்து சாஸ்திரத்தில், கட்டிடக்கலை  மற்றும் அதனுடன் தொடர்புடைய  நேர்மறை மற்றும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் சில விஷயங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 7, 2022, 02:52 PM IST
  • கோயிலுக்கு அருகில் வீடு இருப்பது நல்லதல்ல
  • வாழ்க்கையில் பிரச்சனைகள் தீராமல் சிக்கலை ஏற்படுத்தும்.
  • வீடு கட்டும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை.
வாஸ்து சாஸ்திரம்: வீட்டின் மீது ‘இவற்றின்’ நிழல் பட்டால் முன்னேற்றம் தடை படும்! title=

வாஸ்து சாஸ்திரத்தில், கட்டிடக்கலை  மற்றும் அதனுடன் தொடர்புடைய  நேர்மறை மற்றும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் சில விஷயங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. வீட்டின் மீது சிலவற்றின் நிழல் படுவது மிகவும் அசுபமாக கருதப்படுகிறது. வீட்டின் மீது விழும் இந்த நிழல் மக்களின் நல்வாழ்வை பாதிக்கும் என்பதால், அலட்சியம் செய்யக்கூடாது.

வீடு கட்டும் போதும் வங்கும் போதும் கவனத்தில் கொள்ல வேண்டியவை

கோயில்கள் நமக்கு நேர்மறை ஆற்றலை அளிக்கின்றன என்றாலும்,  கோயிலுக்கு அருகில் வீடு இருப்பது அசுபமாக கருதப்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தில், கோவிலுக்கு மிக அருகில் வீடு இருக்க கூடாது. கோவிலின் நிழல் வீட்டின் மீது விழுவது நல்லதல்ல. இதனால் வீட்டில் உள்ளவர்களின் முன்னேற்றம் தடைபடும் என்கிறது வாஸ்து சாஸ்திரம் (Vastu Shastra).

ALSO READ |  வாஸ்து சாஸ்திரம்: ‘இந்த’ திசையில் கடிகாரத்தை வைக்கக் கூடாது!

எனவே, வீட்டை கட்டும் போதோ, வாங்கும் போதோ, வீட்டின் முன் வீட்டை விட இரண்டு மடங்கு உயரம் வரை கோயில் இருக்கக் கூடாது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

குறிப்பாக , சூரியன், பிரம்மா, விஷ்ணு அல்லது சிவன் கோவில்கள், வீட்டின் பிரதான நுழைவாயிலின் முன் இருக்கக்கூடாது.

வீட்டின் கிழக்கு, வடக்கு, வடக்கு திசையில் பெரிய பாறையோ, பெரிய கல்லோ, தூணோ கூட இருக்கக் கூடாது. இதன் நிழலும் வாழ்க்கையின் முன்னேற்றத்தை தடுக்கிறது.

வீட்டின் முன் பெரிய மரம், சுவர், பள்ளம், கிணறு போன்றவை இருக்கக் கூடாது. கோயிலைப் போலவே வீட்டில் மரத்தின் நிழல் விழுவதும் அசுபமானது.

வீட்டின் முன் எப்போதும் சேறு சகதி இருக்கக்கூடாது. வீட்டின் முன்புறம் அல்லது அதைச் சுற்றிலும் இது போன்ற தடைகள் இருந்தால், வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு இது தடைக்கல்லாக இருக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

ALSO READ |  Feng Shui Tips: மகிழ்ச்சியையும் வளத்தையும் அள்ளிக் கொடுக்கும் 'Laughing Buddha'!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News