இந்தியன் ரயில்வே: இந்தியன் ரயில்வே நம் நாட்டு மக்களின் போக்குவரத்தின் உயிர் நாடியாக இருந்து வருகிறது. மக்கள் தொகை அதிகம் உள்ள நமது நாட்டில், மக்களின் போக்குவரத்தை பொறுத்தவரையில், ரயில்களுக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. ரயிலில் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக இந்தியன் ரயில்வே பல வித வசதிகளை செய்கிறது. அவ்வப்போது பல புதிய விதிகள் இயற்றப்படுகின்றன. சில விதிகள் மாற்றப்படுகின்றன. கோடிக்கணக்கான பயணிகளுக்கு சிறப்பு நிபந்தனைகளின் கீழ் சிறப்பு வசதிகள் வழங்கப்படுகின்றன.
சில குறிப்பிட்ட ரயில் பயணிகளின் நலனுக்காக இந்திய ரயில்வே ஒரு முக்கிய உடிவை எடுத்துள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்காக ரயில்வே ரயில் பெட்டியின் கீழ் பெர்த்தை ஒதுக்கியுள்ளது. அவர்களின் பயணத்தை மேலும் வசதியாக மாற்ற, இந்திய ரயில்வே இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது.
தினமும் லட்சக்கணக்கானோர் ரயிலில் பயணம் செய்கின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், பயணிகள், அதுவும் நீண்ட தூரம் பயணிக்கும் பயணிகள் பெரும்பாலும் தங்களுக்குப் பிடித்த இருக்கையைப் பெற, ஒரு மாதத்திற்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யத் தொடங்குகிறார்கள். பெரும்பாலான மக்கள் விரும்பும் இருக்கை கீழ் பர்த் (லோயர் பெர்த்) அல்லது சைட் லோயர் பெர்த்தாக உள்ளது. ஆனால் இப்போது சில பயணிகளால் இந்த இருக்கையை பதிவு செய்ய முடியாமல் போகலாம். ஆம், இது தொடர்பான ஒரு உத்தரவை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவின்படி, ரயிலின் கீழ் பெர்த் சில வகை பயணிகளுக்கு ஒதுக்கப்படும். ரயில் பயணங்களில் கீழ் இருக்கை, அதாவது லோயர் பர்த் எந்த பயணிகளுக்கு ஒதுக்கப்படும் என்பது பற்றி இந்த பதிவில் காணலாம்.
மாற்றுத்திறனாளிகள் அல்லது உடல் ஊனமுற்றவர்களுக்காக இரயிலின் கீழ் பெர்த்தை ரயில்வே ஒதுக்கியுள்ளது. அவர்களின் பயணத்தை மேலும் வசதியாக மாற்ற, இந்திய ரயில்வே இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது.
சீட் விநியோகம் எப்படி உள்ளது?
ரயில்வே வாரியத்தின் உத்தரவின்படி, ஸ்லீப்பர் வகுப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நான்கு இருக்கைகள், அதாவது 2 கீழ் இருக்கைகள் (லோயர் சீட்), 2 நடு இருக்கைகள் (மிடில் சீட்), மூன்றாவது வகுப்பு ஏசியில் (தர்ட் ஏசி) இரண்டு இருக்கைகள், ஏசி3 எகானமியில் இரண்டு இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள் அல்லது உடல் ஊனமுற்றோரும் அவருடன் பயணம் செய்பவர்களும் இவற்றில் அமரலாம்.
மேலும் படிக்க | ரயிலில் லோயர் பெர்த் வேண்டுமா? இந்த முறையில் புக் செய்தால் கிடைக்கும்!
அதே நேரத்தில், கரீப் ரத் ரயிலில் 2 கீழ் இருக்கைகளும் (லோயர் பர்த்), 2 மேல் இருக்கைகளும் (அப்பர்) மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த இருக்கைகளுக்கு அவர்கள் முழு கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.
மூத்த குடிமக்களுக்கு இந்தியன் ரயில்வே தானாகவே இந்த சீட்டை அளிக்கும்
இவை தவிர, இந்திய ரயில்வே மூத்த குடிமக்களுக்கு தானாகவே லோயர் பர்த்துகளை அளிக்கின்றது. ஸ்லீப்பர் வகுப்பில் 6 முதல் 7 கீழ் பெர்த்கள், ஒவ்வொரு மூன்றாவது ஏசி கோச்சிலும் 4-5 கீழ் பெர்த்கள், அதாவது லோயர் பர்த்கள், ஒவ்வொரு செகண்ட் ஏசி கோச்சிலும் 3-4 லோயர் பெர்த்கள் 45 வயது அல்லது அதற்கு மேற்பட்ட பெண்களுக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் ரயிலில் ஒதுக்கப்பட்டுள்ளன. அவர்கள் எந்த விருப்பத்தையும் தேர்ந்தெடுக்காமலேயே இந்த இருக்கைகளைப் பெற முடியும்.
மறுபுறம், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் அல்லது கர்ப்பிணிப் பெண்களுக்கு மேல் இருக்கையில் டிக்கெட் முன்பதிவு கொடுக்கப்பட்டிருந்தால், ஆன்போர்டு டிக்கெட் சோதனையின் போது TT அவர்களுக்கு கீழ் இருக்கை வழங்குவதற்கான ஏற்பாடு உள்ளது.
சைட் அப்பர் பெர்த் நபர் எங்கு அமர வேண்டும்?
RAC இல் இரண்டு பயணிகள் பக்கவாட்டில் இருக்கும் கீழ் பெர்த்களை (சைட் லோயர்) பெறும்போது மிகவும் சர்ச்சை ஏற்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில் அப்பர் பர்த் உள்ளவர்களுக்கு அதிக சிக்கல் ஏற்படுகிறது. RAC-ல் இரண்டு பேருக்கு சைட் லோயர் கிடைக்கும்போது, மேல் பெர்த் உள்ளவருக்கு உட்காருவதில் சிக்கல் ஏற்படுகின்றது. சில சமயங்களில் TTE -யும் இதில் குழம்பிப் போவது மிகப்பெரிய பிரச்சனை. RAC சீட் கிடைத்த 2 பேர் ஏற்கனவே அங்கு அமர்ந்திருப்பார்கள். ஆனால் அத்தகைய சூழ்நிலையில் அவர்கள் ஒரு இருக்கையில் அட்ஜஸ்ட் செய்ய வேண்டியிருக்கும்.
சைட் அப்பர் கிடைத்திருக்கும் நபர் பெர்த் எண்ணின்படி அமர்ந்து கொள்வார். அமரும் நேரம் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ஆகும். ஆனால் இதற்கான விதிகளை ரயில்வே வகுக்கவில்லை. அத்தகைய சூழ்நிலையில், மூன்று பயணிகளும் இணக்கமான முறையில் தங்களுக்குள் அட்ஜஸ்ட் செய்து கொண்டு அமர வேண்டும்.
மேலும் படிக்க | ரயிலில் இந்த சீட்டை எளிதாக புக் செய்வது எப்படி? - இதில் பாருங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ